கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காணியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த குப்புசாமி என்பவரை அவரது மகன் சொத்துக்காக கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து குப்புசாமி சொத்து பங்கீடு தொடர்பாக என் மகன் கொலை மிரட்டல் தனக்கு விடுவதாக நெகமம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து குப்புசாமி கூறுகையில் கடந்த 1997 ஆம் ஆண்டு என்னுடைய மகன் கிருஷ்ணராஜ் பெயரில் 22 ஏக்கர் நிலத்தை முன்னரே பாகம் செய்து கொடுத்து விட்டேன் தற்போது என்னிடம் மீதம் இருக்கும் 8.19 ஏக்கர் நிலத்தில் என் வாழ்வாதாரத்திற்காக நான் விவசாயம் செய்து வருகிறேன். இந்த சூழலில் என்னுடைய மகன் என்னுடைய சொத்தை அபகரிக்கும் நோக்கோடு என்னை கொலை மிரட்டல் விடுவதோடு தான் குடியிருந்த வீட்டை விட்டும் வெளியே அனுப்பி விட்டார்.
என்னுடைய மகன் தனது மாமனாரான திமுக பொள்ளாச்சி நகர அவைத்தலைவர் அழகப்பன் அவருடைய தூண்டுதலின் பேரில் கட்சி செல்வாக்கை பயன்படுத்தி என்னை மேலும் மேலும் துன்புறுத்தி வருகிறார். என்னுடைய தோட்டத்தில் வேறு நபர்களை தங்க வைத்துள்ளார். அவர்கள் என்னுடைய தோட்டத்திற்கு என்னை செல்ல விடாமல் தடுக்கின்றனர். நான் என்னுடைய வீட்டில் தங்க இயலாமலும் தோட்டத்திலும் தங்க இயலாமலும் இப்பொழுது பயத்துடன் நடு ரோட்டில் நிற்கின்றேன்.
என்னுடைய உயிர் பாதுகாப்பு வேண்டியும், என்னுடைய சொத்துக்கான பாதுகாப்பு வேண்டியும் நெகமம் காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்துள்ளேன். மேலும் எனக்கு நீதி கிடைக்கும் என தான் நம்புவதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.
நீதி கேட்டு வீதியில் நிற்கும் இவருக்கு நீதி கிடைக்குமா..?
பொறுத்திருந்து பார்ப்போம்…
தமிழக துணை தலைமை நிருபர்,
-M.சுரேஷ்குமார்.