சரவணம்பட்டி பகுதியில் உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 10ஆம் வகுப்பு வரை
வரும் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பள்ளியில் உள்ள சுற்று சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்நிலையில் அந்தப் பள்ளி ஆசிரியர்கள் அப்பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று பிளக்ஸ் பேனர் வைத்து எச்சரிக்கை செய்து உள்ளனர்.
தற்போது பள்ளிகள் விடுமுறை முடிந்து வருகிற 6 ஆம்தேதி திறக்கப்படும் என அரசு அறிவித்து உள்ள நிலையில் அந்த சுற்று சுவர் சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி திறந்த பின்பு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.