கோவை மாவட்டம் வால்பாறை நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களுக்கு குறுகிய சாலைகளால் இடையூறு வாகன போக்குவரத்தால் நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இடையூறு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வால்பாறை P.பரமசிவம் இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கோரிக்கை மனு ஒன்று வைத்துள்ளார். மனுவில் மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பணிவான வணக்கம்.
இயற்கை மிகுந்த வால்பாறை பகுதியில் தினந்தோறும் தேயிலைத்தோட்டத் தொழிலாளர்கள் வெளியூரிலிருந்து உற்றார் உறவினர்கள், சுற்றுலாப்பயணிகள் வால்பாறைக்கு தனது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய வருகிறார்கள். குறுகிய சாலை, அடிக்கடி வாகனப் போக்குவரத்து, இடையூறு, பொதுமக்கள் நடப்பதற்கு சிரமம், பல துறை அரசு உயர் அதிகாரிகள், நகரமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள் இத்தனையும் இருந்தும் எந்தவொரு கட்டமைப்பும் இல்லாமல் அடித்தட்டு மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
வேதனைப்படுகின்றனர், யாரிடம் சொல்வது என்று புலம்புகிறார்கள். ஒருசில அரசு அதிகாரிகளின் சுயநலனுக்காக நகரமும் மாசுபடுகிறது. அரசுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. எதிர்கால சந்ததிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.
இனியும் மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தேர்தல் நேரம் என்பதை கருத்தில் கொள்ளாமல் வால்பாறை பகுதியில் இருக்கும் அனைத்து அரசு உயர் அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும், சமூக ஆர்வலர்களும் கலந்து ஆலோசித்து வால்பாறை இயற்கை மிகுந்த பகுதி சுத்தமாகவும், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமலும், அடித்தட்டு மக்களுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய உதவி செய்யுமாறு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் தமிழகத்தில் அதிக வருமானம் வரக்கூடிய நகராட்சியில் வால்பாறையும் ஒன்று என்பதையும், இந்நகராட்சியினால் அடித்தட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யவில்லை, அரசுத்துறைக்கு சொந்தமான பல இடங்கள் நகர பகுதியில் பயனில்லாமல் உள்ளது என்பதையும் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத் துணைத் தலைமை நிருபர்,
-M.சுரேஷ்குமார்.