கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த வாரம் மழை அதிகமாக பெய்வதால் முன்னெச்சரிக்கை பாதுகாப்பாக இருக்க பல இடங்களை பொள்ளாச்சி சார் ஆட்சியாளர் அவர்கள் ஆய்வு செய்தார்.
அதன் ஒரு பகுதியாக வால்பாறை அரசு மருத்துவமனையும் ஆய்வு செய்தார் அப்பொழுது அவரிடம் நோயாளியின் நலச் சங்க உறுப்பினரும், சமூக ஆர்வலரும், வால்பாறை பரமசிவம் சார் ஆட்சியாளரிடம் நேரடியாக சந்தித்து வால்பாறை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக நோயினால் பாதிக்கப்பட்டு வரும் வயதான முதியோர்கள், கர்ப்பிணி பெண்கள், மற்றும் கை குழந்தைகளுடன் வரும் பெண்கள், மாற்றுத் திறனாளிகள், மிகவும் சிரமப்படுகின்றனர்.
இதனால் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களும் சிரமப்படுகின்றனர் இப்பகுதியில் இருக்கும் பொது மக்களுக்கு தேவையான உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க தாங்கள் தலைமையில் நோயாளி நல சங்க கூட்டத்தை கூட்ட தாங்கள் பரிந்துரை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
அதற்கு பதில் அளித்த சார் ஆட்சியாளர் அவர்கள் இப்பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளில் முக்கிய தேவையான மருத்துவ சேவை தங்கு தடை இல்லாமல் மருத்துவமனையில் கிடைக்க உடனடியாக நோயாளின் நலச் சங்க கூட்டத்தை கூட்டுகிறேன் அதற்கான ஏற்பாடுகளின் செய்து தருகிறேன் என்று உறுதி அளித்துள்ளார்.
வால்பாறை பகுதிக்கு சார் ஆட்சியாளரின் வருகை வால்பாறை பகுதியில் இருக்கும் பொது மக்களுக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இருக்கும் உள் நோயாளிகள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-M.சுரேஷ்குமார்.