தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கோடை மழை பெய்து வரும் சூழ்நிலையில் சாலை ஓரங்கள் மற்றும் வயல்வெளி பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது.
அதேபோல விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடி பகுதியில் வயல்வெளியில் தங்கி இருந்த மழை நீரில் தண்ணீர் குடிக்க சென்ற பசுமாடு ஒன்று சேற்றில் சிக்கிக்கொண்டு மீள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது.
இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் சேற்றில் இறங்கி பசு மாட்டினை பெரும் சிரமத்திற்கு இடையில் போராடி பத்திரமாக மீட்டனர். சூரங்குடியை சேர்ந்த இளைஞர்கள் சேற்றில் சிக்கிக் கொண்டு தவித்த பசு மாட்டை மீட்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது…
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
விளாத்திகுளம் பகுதி நிருபர்,
-பூங்கோதை.