மழைக்கால மின் விபத்தில் இருந்து காத்து கொள்வதற்கு பொதுமக்களுக்கு கோவை மாநகர போலீசார் அறிவுரை…!!!

கோவை சரவணம்பட்டி அடுத்த சின்னவேடம்பட்டி, ராமன் விஹார் குடியிருப்பில் வியோமா பிரியா(8) மற்றும் ஜெயான் ரெட்டி(6) ஆகியோர் நேற்று முன்தினம் அங்குள்ள பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள போலீசாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது கோவையில் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மின் விபத்தில் இருந்து பாதுகாத்து கொள்ள கோவை மாநகர போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். இதுகுறித்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை:

  • அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் தங்களது பகுதிகளில் உள்ள மின்மாற்றிகள், பூங்காக்கள் மற்றும் பிற கட்டடங்களில் உள்ள மின் இணைப்புகள் அனைத்தும் பாதுகாப்பான முறையில பொருத்தப்பட்டிருக்கிறதா அல்லது இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • மின் வயர்கள் சேதமின்றி உள்ளதா என்பதையும், மழைக்காலங்களில் மின் கசிவு ஏற்படும் வாய்ப்பை தவிர்ப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
  • தங்களது அசோசியேசன் வாயிலாக பயிற்சி பெற்ற எலக்ட்ரீசியன், மின் வாரிய ஊழியர்களைக் கொண்டு அவ்வப்பொழுது பராமரிக்க வேண்டும்.
  • மின் இணைப்புகளை ஒருபோதும் ஈரக் கைகளால் தொடாதீர்கள். மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழைநேரங்களில் மின்சாதனப் பொருட்களை தேவையில்லாமல் உபயோகப்படுத்த வேண்டாம்.
  • மின்சாதனப் பொருட்களை உபயோகித்த பின், மின் இணைப்பிலிருந்து துண்டித்து வையுங்கள். ஈரப்பதம் உள்ள இடங்களில் மின் இணைப்பிற்காக எக்ஸ்டென்சன் கார்டுகளை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.
  • ஈரப்பதம் உள்ள சுவர்களில் இருக்கும் பிளக் பாயிண்டுகளை உபயோகிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
  • ஜன்னல்களுக்கு அருகில் உள்ள பிளக் பாயிண்டுகளில் மழை நீர் தெறித்து விடும் அல்லது புகுந்துவிடும் வாய்ப்பு உள்ளதால், மழை நேரங்களில் ஜன்னல்களை மூடி வையுங்கள்.
  • மின்சாரப் பழுது ஏற்பட்டால், மின் வாரிய ஊழியர் அல்லது பயிற்சி பெற்ற எலக்ட்ரீசியன் வாயிலாக சரிசெய்யுங்கள். நீங்களே தன்னிச்சையாக சரி செய்ய முயலாதீர்கள்.

சுவர்களிலும், மேற்கூரைகளிலும் ஈரப்பதம் இருந்தாலோ அல்லது மழை நீர்க்கசிவு ஏற்பட்டாலோ உடனடியாக சரிசெய்யுங்கள்.

  • வெளியிடங்களுக்கு செல்லும்போது ஈரப்பதம் உள்ள சுவர்கள் மற்றும் மின் கம்பங்களை தொடுவதை தவிர்க்கவும்.
  • அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் தங்களது பகுதிகளில் உள்ள மின்மாற்றிகள், பூங்காக்கள் மற்றும் பிற கட்டடங்களில் உள்ள மின் இணைப்புகள் அனைத்தும் பாதுகாப்பான முறையில பொருத்தப்பட்டிருக்கிறதா அல்லது இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • மின் வயர்கள் சேதமின்றி உள்ளதா என்பதையும், மழைக்காலங்களில் மின் கசிவு ஏற்படும் வாய்ப்பை தவிர்ப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
  • தங்களது அசோசியேசன் வாயிலாக பயிற்சி பெற்ற எலக்ட்ரீசியன், மின் வாரிய ஊழியர்களைக் கொண்டு அவ்வப்பொழுது பராமரிக்க வேண்டும்.
  • மின் இணைப்புகளை ஒருபோதும் ஈரக் கைகளால் தொடாதீர்கள்.
  • மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழைநேரங்களில் மின்சாதனப் பொருட்களை தேவையில்லாமல் உபயோகப்படுத்த வேண்டாம்.
  • மின்சாதனப் பொருட்களை உபயோகித்த பின், மின் இணைப்பிலிருந்து துண்டித்து வையுங்கள்.
  • ஈரப்பதம் உள்ள இடங்களில் மின் இணைப்பிற்காக எக்ஸ்டென்சன் கார்டுகளை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.
  • ஈரப்பதம் உள்ள சுவர்களில் இருக்கும் பிளக் பாயிண்டுகளை உபயோகிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
  • மழைக்காலங்களில் அல்லது தரையில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் சமயங்களில் மின்சாரக் கம்பங்களுக்கு அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
  • பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் அதிகம் கூடும் பூங்கா போன்ற இடங்களில் உள்ள மின் கம்பங்கள், மின் இணைப்புகள் போன்றவற்றின் அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

வீட்டிற்கு அருகில் உள்ள இடங்கள் வேறெங்கேனும் மின்சாரப் பழுது தொடர்பாக பிரச்னையை காண நேரிட்டால், உடனடியாக மின்சார வாரியத்திற்கு தெரிவியுங்கள்.

  • சாலையோரங்களில் மின் பராமரிப்பு பணிகளோ, சாலைப் பராமரிப்பு பணிகளோ நடைபெற்றால், அப்பகுதிகளில் சில நேரங்களில் மின்கசிவு ஏற்படும் வாய்ப்பு இருக்கும். எனவே, அத்தகைய பகுதிக்கு செல்லும்போது கூடுதல் கவனத்துடன் செல்ல வேண்டும்.
  • கட்டடம் இடிந்து விழும் நிலையில் இருந்தாலோ, மரம் விழும் நிலையில் இருந்தாலோ, மரக்கிளைகள் காய்ந்து விழும் நிலையில் இருந்தாலோ மாநகராட்சி அல்லது உங்களது பகுதி கவுன்சிலருக்கு தெரிவித்து, அவற்றை அப்புறப்படுத்த உதவ வேண்டும்.
  • மழைபெய்யும் போது பழுதான கட்டடத்தின் கீழ் அல்லது மரத்தின் அடியில் ஒதுங்க வேண்டாம்.
  • மழைக்காலங்களில் வெளியில் செல்லும் போது வெள்ளம் தேங்கிய பகுதிகளின் நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும்.
  • மழைக்காலங்களில் மின்சார தாக்குதலை தவிர்க்கும் பொருட்டு ரப்பர் காலணிகள், ரப்பர் பூட்ஸ்களை உபயோகிப்பது நல்லது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp