கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலாத்தலமான மூணாறு பகுதியில் ததேயிலை தோட்டம், ஏலக்காய் தோட்டம் மற்றும் காபி தோட்டம் போன்றவற்றில் அதிகமாக வேலை செய்யும் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியில் மருத்துவ வசதிகளும் மருத்துவமனைகளும் மருத்துவ சேவைக்கான ஊர்திகளும் மிகவும் குறைவாகவே உள்ளது. மிக முக்கியமான நோய்களுக்கும் அவசர சிகிச்சைக்கும் பல கிலோமீட்டர் பயணம் செய்து பல்நோக்கு மருத்துவமனைகளை அணுக நேரிடுகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதிலும் மருத்துவமனைகளுக்கு செல்ல போதுமான வாகன வசதிகள் இல்லாத காரணத்தினால் சில மரணங்கள் தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்படுகின்றன அதில் புது முயற்சியாக மூணார் டூரிஸ்ட் நைட் கைட் அசோசியேஷன் சார்ந்த செக்ரட்டரி இளைஞர் ஜெய்சன் மற்றும் அவரோடு கூடிய நண்பர்கள் இணைந்து மூணார் பகுதியில் இலவசமாக சேவை செய்ய ஆம்புலன்ஸ் ஒன்று வாங்கி இப்பகுதி மக்களின் வாழ்வை மேம்படுத்த முயற்சி செய்து வருகின்றனர்.
அவர்கள் அனைத்து பகுதிகளிலும் சென்று இதற்கான உதவிகள் வேண்டி சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளிடமும் பகுதியில் வசிக்கும் மக்களிடமும் உதவிகள் கேட்டு வருகின்றனர். இப்பகுதியில் இப்படி ஒரு புது முயற்சியை எடுப்பதில் முக்கிய பங்கு வைக்கும் ஜெய்சன் அவர்களுக்கு நாளைய வரலாறு செய்திகள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இப்பகுதிக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கிறவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கி கணக்கு எண்ணில் பணம் செலுத்தினால் உதவியாக இருக்கும் உதவி செய்ய விரும்புபவர்கள் இதை பயன்படுத்தி கொள்ளலாம்.
Bank Details
Name: b Munnar Tourist Guide Association
Bank Name: Kerala Bank, Munnar Branch
A/c No. : 136912801200067
IFSC Code: KSBK0001369
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன் மூணார்.