கோவை மாவட்டம் வால்பாறை வில்லோனி எஸ்டேட் அருகே நெடுங்குன்றம் செட்டில்மென்ட் மலைவாழ் மக்கள் குடியிருக்கும் பகுதி சேர்ந்த ரவி என்பவரை காட்டு யானை தாக்கி உயிர் இழந்துவிட்டார்.
அவரோடு பயணித்தவர்களும் அங்கங்கே காயங்கள் பட்டு வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வால்பாறையில் இதோடு தொடர்ந்து சுமார் 4 முறை வனவிலங்கு தாக்கி உயிரிழந்து உள்ளார்கள். வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு அறிவித்த நிவாரணம் உதவித்தொகை முன்பணம் கொடுப்பதும் இறப்பவரின் உடலை அங்கிருந்து அப்புறப்படுத்துவதையும் இன்றியமையாத கடமையாக வனத்துறை அதிகாரிகள் சுறுசுறுப்பாக செய்கிறார்கள்.
இந்த மாதிரி துயர சம்பவங்களுக்கு மாவட்ட வனத்துறை அதிகாரி வருவதே கிடையாது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு மூலம் என்ன செய்யலாம் என்ற உத்தரவாதமும் இல்லாமல் அடித்தட்டு மக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இது மிகவும் வேதனையாக உள்ளது.
இது தொடர்பாக நமது நாளைய வரலாறு பத்திரிக்கை, வணிகர் சம்மேளனம், சமூக அமைப்பு மூலம் வால்பாறை வன அலுவலர் திரு வெங்கடேஷ் அவர்களிடம் சந்தித்து கடந்த காலங்களில் வனவிலங்கு தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புக்கு பகுதிக்குள் வருவதை அறிந்து வேட்டை தடுப்பு காவலர்கள் வனவிலங்கு விரட்டும் வாகனம், எஸ்டேட் நிர்வாகம் மூலம் பாதுகாப்பு போன்ற காரியங்கள் செய்யப்பட்டு வந்தது தற்போது அனைத்தும் கேள்விக்குறியாகவே உள்ளது.
வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணியிடம் எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்யாமல் பார்ப்பதற்கு பணத்தை மட்டும் வசூல் செய்வதில் மும்மரமாக இருக்கின்றார்கள், இரவு நேரங்களில் வாகனங்கள் மூலம் சுற்றுலா பயணிகளை அனுமதித்து பணம் வசூல் செய்வது போன்ற காரியங்களை மட்டும் தான் செய்து கொண்டிருக்கிறீர்கள். இதே நிலை நீடிக்காமல் இருக்க அடிதட்டு மக்களின் வாழ்வாதாரத்தையும் உயிரையும் பாதுகாக்க வனவிலங்கு குடியிருப்புக்கு மற்றும் எஸ்டேட் பகுதிக்கு வராமல் இருக்க அடர்ந்த வனப்பகுதியில் வனவிலங்கு விரும்பி உண்ணும் பழம் வகைகள் குடிநீர் வசதிகள் செய்து தர வேண்டும்.
மேலும் வனத்தை ஒட்டிய பகுதிகளில் அகழி மற்றும் மின் வேலி அமைக்க வேண்டும் வனவிலங்கு வந்தால் உடனடியாக வேட்டை தடுப்பு காவலர்களையும் வாகனங்களை வைத்து உயிரிழப்புக்களையும் தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிகள் பாதிக்காமல் பாதுகாக்க வேண்டும், தற்பொழுது உயிர் இழந்த திரு ரவி அவர்களின் குழந்தைகளுக்கு அனைத்து சலுகைகளை பெறக்கூடிய அரசு வேலை வழங்க வேண்டும்.
இதற்கு மாவட்ட வன அலுவலர் பொள்ளாச்சி சார் ஆட்சியாளர் தலைமையில் வால்பாறையில் உயர் அதிகாரிகள் சமூக ஆர்வலர்கள் சமூக அமைப்பு மூலம் ஆலோசனைக் கூட்டம் உடனடியாக நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதன்படி வனத்துறை அலுவலர் இன்னும் பத்து தினங்களுக்குள் வனவிலங்கு தாக்காமல் இருக்க அடிதட்டு மக்களின் வாழ்வாதாரத்தையும் உயிர் பலியும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கலாம் என்று உறுதி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-P.பரமசிவம், வால்பாறை.