தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேலிடுபட்டி கிராமத்தைச் சேர்ந்த கண்ணன்(48) மற்றும் குருவார்பட்டி கிராமத்தை சேர்ந்த(43) ஆகியோர் இருவரும் 25-04-2024 அதிகாலை 3 மணி அளவில் விளாத்திகுளம் பேருந்து நிலையத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்து பேருந்துக்காக காத்திருந்தனர்.
அப்போது சற்றும் எதிர்பாராமல் பேருந்து நிலையத்தின் மேற்கூரை இடிந்து கண்ணன் மற்றும் ரவிக்குமார் தலையில் விழுந்தது.
இதனால் காயமடைந்த ரவிக்குமார் மற்றும் கண்ணனை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இதுகுறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பல ஆண்டுகளாக விளாத்திகுளம் பேருந்து நிலையம் உரிய பராமரிப்பு செய்யவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
விளாத்திகுளம் பகுதி நிருபர்,
-பூங்கோதை.