ஜோதிட சாஸ்திரப்படி, ஆண்டுதோறும், சூரியன் சித்திரை மாதம் மேஷ ராசியில் நுழையும்போது உச்சமடைகிறார் . பூமியில் அதிக வெயில் தாக்கம் இருக்கும் இந்த அக்னி நட்சத்திரக் காலகட்டத்தை கத்திரி வெயில் என்றும் கூறுவார்கள் .இந்த கத்தரி வெயில் வருகிற 28-ந்தேதி வரை அதாவது, 25 நாட்கள் தொடர்ந்து வாட்டி வதைக்க காத்திருக்கிறது. பொதுவாக கத்தரி வெயில் காலத்தில்தான் வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கும். ஆனால் கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்தே வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதிலும் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சியது போல இன்று அக்னி நட்சத்திர தோஷம் துவங்குகிறது. இன்று 04.05.2024 சித்திரை 21 ஆம் தேதி காலை மணி 09.28 க்கு ஆரம்பித்து வைகாசி மாதம் 15 ஆம் தேதி (28.05.2024) மாலை 04.17 மணி வரை அக்கினி நட்சத்திர பாதிப்பு இருக்கும். பரணி நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் ஆரம்பித்து ரோகிணி நட்சத்திரம் முதல் பாதத்தில் முடிவடையும் இந்த அக்கினி நட்சத்திர காலத்தில் புதுமனை முகூர்த்தம்,வீடு கீற்று போடுதல்,சிலாப் போடுதல், நிலை வைத்தல், விதை விதைத்தல் , கிணறு வெட்டுதல், மரக்கன்று நடுதல், மரம் கவ்வாத்து கழித்தல் போன்ற காரியங்களைத் தவிர்த்தல் நன்று.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
முக்கியமாக, கோடைவாச ஸ்தலங்களான ஊட்டி, கொடைக்கானலில் கூட வெப்பம் உணரப்படுகிறதாம். எனவே, அவசியம் இருந்தாலன்றி வீட்டை விட்டு வெளியே போகாதீர்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். அடுத்த கோடையைச் சமாளிக்க மறக்காமல் மரக்கன்று நடுங்கள். இருக்கும் மரத்தை எக்காரணத்தைக் கொண்டும் யாரும் வெட்ட அனுமதிக்காதீர்கள்.
செய்தியாளர்கள்:
-சோலை. ஜெய்க்குமார் & Ln. இந்திராதேவி முருகேசன், கோவை.