தமிழகத்தின் சாதனை சிறுவன் கிருஷ்வா கஜபதிக்கு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் கே.என் நேரு ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
தமிழ்ச்சினிமா பிரபலம் ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கத்துடன் சாதனை சிறுவன் கிருஷ்வா கஜபதி.
பள்ளி செல்லும் வயதில் 12 உலக சாதனைகளை படைத்து அசத்தி இருக்கிறார், சென்னை மயிலாப்பூரை சேர்ந்த 10 வயது சிறுவன் கிருஷ்வா கஜபதி. விளையாட்டில் எந்தவித குடும்ப பின்னணியும், முன்பின் அறிமுகமும் இல்லாத சிறுவன் கிருஷ்வா தனி ஒருவனாக விளையாட்டு துறையில் சாதிக்க ஆர்வமுடன் களம் இறங்கி உள்ளார்.
சாதனை சிறுவனை பாராட்டுகிறார், அமைச்சர் கே.என்.நேரு.
தினசரி வாழ்க்கைக்கு போராடும் ஆட்டோ ஓட்டுனரின் மகனான கிருஷ்வா மந்தைவெளியில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். மூன்று வயதில் இருந்து கராத்தே, சிலம்பம், ஸ்கேட்டிங், குங்ஃபூ, செஸ், கியூப், பேட்மிட்டன் மற்றும் ரோலோ போலா மற்றும் பல கலைகளைக் கற்று அதில் பல சாதனைகளையும் செய்து வருகிறார் என்பது பெரும் வியப்பை ஊட்டும் தகவல்..!
சாதனை சிறுவனை தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தோள் மீது கை போட்டு வாழ்த்துகிறார்.
இளம் வயது சாதனையாளர் கிருஷ்வாவின் விருதுகள்:
- கிருஷ்வா கடந்த 7 ஆண்டுகளில் 12 விருதுகள் மற்றும் பல மெடல்களையும் வாங்கி சாதனை படைத்துள்ளார், மிக இளம் வயதிலேயே…
- நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் ஸ்கேட்டிங்கில் நிஞ்ஜாக் தொடர்ந்து 1 மணி நேரம் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.
- இந்தியா புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் ஸ்கேட்டிங்கில் சிலம்பம் தொடர்ந்து ஒரு மணி நேரம் 10 நிமிடம் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.
- கால்பந்தில் தொடர்ந்து பத்து நிமிடம் நின்று சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்துள்ளார்.
- இந்தியா புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் கால்பந்தில் 15 நிமிடம் தொடர்ந்து நின்று நிஞ்ஜாக் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.
- இன்ஜினியஸ் சாம் வேர்ல்ட் ரெக்கார்ட் ஸ்கேட்டிங்கில் தொடர்ந்து 111 ஓடுகள் உடைத்து உலக சாதனை படைத்துள்ளார்.
- இன்ஜினியர்ஸ் சாம் வேர்ல்ட் ரெக்கார்ட் ஸ்கேட்டிங்கில் கண்ணை கட்டிக் கொண்டு 30 நிமிடம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்துள்ளார்.
- கலாம் வேர்ல்ட் ரெக்கார்ட் ஸ்கேட்டிங்கில் கண்ணை கட்டிக்கொண்டு ஒரு மணி நேரம் தொடர்ந்து நிஞ்ஜாக் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.
- நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் தொடர்ந்து 555 ஓடுகளை 16.54 நிமிடத்தில் உடைத்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
- கலாம் வேர்ல்ட் ரெக்கார்ட் கால்பந்தில் நின்று தொடர்ந்து 25 ஓடுகளை உடைத்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
- இன்டர்நேஷனல் அச்சீவர்ஸ் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் கால் பந்தின் மேல் பலகை வைத்து அதன் மேல் நின்று தொடர்ந்து 21 நிமிடம் நுண் ஜாக் தொடர்ந்து செய்து உலக சாதனை படைத்துள்ளார்.
- கலாம் வேர்ல்ட் ரெக்கார்ட் கால் பந்தின் மேல் பலகை வைத்து அதன் மேல் நின்று 25 நிமிடம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்துள்ளார்.
- இன்ஜினியர்ஸ் சாம் வேர்ல்ட் ரெக்கார்டு ரோலோ போலோவில் நின்று 10 நிமிடம் 58 வினாடி இன்று சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்துள்ளார்.
சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் பிரதமர் நரேந்திர மோடியின் முன்னிலையில் குரூப் போட்டிகளில் சிலம்பம் சுற்றி சான்றிதழ்களையும் மெடலையும் பெற்றுள்ளார்.
ஆட்டோ ஒட்டுனரான கிருஷ்ணாவின் தந்தை மிகுந்த சிரமத்திற்கிடையே கிருஷ்ணாவை இத்துறையில் சாதிக்க பயிற்றுவித்து வருகிறார்.
இந்த சாதனைகளை கண்டு தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் கே.என்.நேரு வியந்து பாராட்டியுள்ளனர்.
சாதனை சிறுவன் கிருஷ்வா விளையாட்டு துறையில் மேலும் உலக சாதனைகள் படைக்க வாழ்த்துகள்…!!
-ஆர்.கே.விக்கிரம பூபதி.