CEAT டயர்ஸ் கேடிஎம் ஆர்சி கப் சீசன் 2வின் அதிகாரப்பூர்வ பந்தய பங்குதாரராக அதன் கூட்டாண்மையை அறிவித்தது!!

அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பிற்கு புகழ்பெற்ற முன்னணி டயர் உற்பத்தியாளரான CEAT Tyres, KTM RC CUP உடன் அதிகாரப்பூர்வ பந்தய பங்குதாரராக தனது கூட்டாண்மையை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிற்கு ஆதரவளிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் CEAT இன் பயணத்தில் இந்த ஒத்துழைப்பு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.

KTM RC CUP, சிறந்த பந்தயங்கள் மற்றும் விதிவிலக்கான திறமைகளுக்கு பெயர் பெற்றது. CEAT Tyres இன் மேம்பட்ட டயர் தொழில்நுட்பத்தில் இருந்து சிறந்த பிடிப்பு, மேம்பட்ட செயல்திறன் மற்றும் ஒப்பிடமுடியாத நீடித்துழைப்பு ஆகியவற்றை வழங்குவதற்காக வடிவமைக் கப்பட்டுள்ளது.

CEAT டயர்கள் சமீபத்தில் அறிமுகப்படுத்திய CEAT ஸ்டீல் ஸ்போர்ட் ராட் டயர்களை பந்தயத்திற்குவழங்கியுள்ளன. இது குறிப்பாக அதிவேக பந்தயத்தின் கடுமையான தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு பந்தய வீரரும் பாதையில் தங்கள் அதிகபட்ச திறனை அடைய முடியும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

KTM உடனான கூட்டாண்மை பற்றிப் பேசுகையில், CEAT தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி திரு. லக்ஷ்மி நாராயணன் B, “KTM RC Cup சீசன் 2 உடன் ரேசிங் பங்குதாரராக இணைந்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் சமீபத்தில் Steel Sport Rad டயர்களை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த டயர் எங்கள் சென்னை ஆலையில் தயாரிக்கப்பட்டது. இந்த சீசன் முழுவதும் ஸ்டீல் ஸ்போர்ட் ராட் டயர்களே அனைத்து பைக்கிளும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எங்கள் டயர்களுக்கு குளோபல் டெஸ்டிங் அண்ட் டெவலப்மென்ட் ஆலோசகர் திரு. ஜெர்மி மெக்வில்லியம்ஸ் மற்றும் கஸ்டோ ரேசிங்கை உருவாக்கிய இம்மானுவேல் ஜெபராஜ் மற்றும் அனைத்து ரைடர்களிடமிருந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அனைத்து பந்தய வீரர்களும் கடந்த 2 வாரங்களாக எங்கள் டயர்களுடன் பயிற்சி ரைடுகளை அனுபவித்து வருகின்றனர். ரேசிங்-இல் லேப் நேரம் பெரும் பங்கு வகிக்கிறது.

இந்த ஆண்டு லேப் நேரம் கிட்டத்தட்ட சுமார் 1.5 வினாடிகள் அதிகரித்துள்ளது. இது மிகப் பெரிய விஷயம். ரைடர்கள் மிகவும் வசதியாகவும், நம்பிக்கையுடனும், சுமுகமாகவும் ரைட்களை மேற்கொண்டனர். எங்கள் டயர்களின் செயல்திறனுக்கு இதுவே சான்றாகும்” என்றார்.

அவர் மேலும் கூறுகையில், ” எங்களது சமூக ஊடக தளத்தின் மூலம் இந்த 2வது சீசனுக்கு அருமையான வரவேற்பு கிடைத்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு CEAT Enduro Tracks என்ற திட்டத்தை நாங்கள் தொடங்கினோம். அதற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்தியர்கள் பந்தயத்தில் மிகவும் ஆர்வமாக உள்ளனர். இளைய தலைமுறையினர் அனைத்தையும் அறிந்து கொள்ள விரும்புகின்றனர்.

இந்த டயர்களை பந்தயத்தில் மட்டுமல்லாமல் ஒரு சாதாரண சவாரிக்கும் பயன்படுத்தலாம். இந்த டயரின் வடிவமைப்பு, கலவை மற்றும் டயர் உருவாக்கம் ஆகியவை சமீபத்திய தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. திரு. ஜெர்மி மெக்வில்லியம்ஸ் கடந்த ஒரு மாதமாக எங்கள் டயர்களுடன் ரைட்களை அனுபவித்து வருகிறார். அவர் ஆஸ்திரியாவில் எங்கள் டயர்களை சோதிக்க விரும்புகிறார்.

உலக அளவில் சென்னையை எடுத்துச் செல்ல நாங்களும் ஆர்வமாக உள்ளோம். CEAT எப்போதும் எங்கள் இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய விரும்புகிறது” என்றார்.

-சீனி, போத்தனூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp