தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் புதூர் பேரூராட்சியில் சுமார் 79 நபர்களுக்கு கடந்த 2000 ம் ஆண்டு ஆதிதிராவிட நலத்துறையால் சர்வே எண் 228/2 ,A ன்படி பட்டா வழங்கப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு அளவீடு செய்து முறையான பட்டா வழங்காததால் வீடு கட்ட முடியாத நிலை உள்ளது.
ஏனவே முறையாக அளவீடு செய்து தர கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதூர் நகர செயலாளர் செந்தில்வேல் தலைமை தாங்கினார். அய்யனார் முன்னிலை வகித்தார்.
போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.புவிராஜ் தாலுகா செயலாளர் கா.ஜோதி, தாலுகா குழு உறுப்பினர்கள் பி ஆண்டி மலைக்கனி விவசாயிகள் சங்க தாலுகா தலைவர் ஆர் ராமலிங்கம் மற்றும் சின்னவன் நாயக்கன்பட்டி கிளைச் செயலாளர் சுபாபுராஜ் வாலிபர் சங்கம் கனகராஜ் மற்றும் சம்பந்தப்பட்ட பயனாளிகள் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் முறையானபட்டா வழங்க கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
நாளைய வரலாறு செய்திக்காக,
விளாத்திகுளம் செய்தியாளர்,
-ந.பூங்கோதை.