மதுக்கரை மார்க்கெட் பகுதியில் இருந்து சீரபாளையம் வழியாகச் செல்லும் சாலையில் எல் அண்ட்டி பைபாஸ் சாலை செல்கிறது.
இன்று சுமார் 3 மணி அளவில் மதுக்கரை மார்க்கெட் பகுதியில் இருந்து வந்த இருசக்கர வாகனம் சீராபாளையம் சாலைக்குச் செல்ல எல்&டி பைபாஸ் சாலையை கடக்க முயலும் போது எதிரெதிரே வந்த இரண்டு கார்களுக்கு இடையே சிக்கி விபத்துக்குள்ளானது.
இதில் இரு சக்கர வாகனம் மற்றும் ஒரு கார் பலத்த சேதம் அடைந்தது மற்றொரு கார் சிறு சேதத்துடன் தப்பியது. இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் மதுபானம் அருந்தி இருந்ததாக அருகில் இருந்தவர்கள் பேசிக்கொண்டனர்.
குறுக்கு சாலையை கடக்கும் பொழுது மிகுந்த கவனம் தேவை. நல்வாய்ப்பாக பெரும் அசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.