கடன் வாங்கி தருவதாக 2 லட்ச ரூபாய் மோசடி!! 2 பேர் கைது!!!

கோவில்பாளையத்தில் தனியார் நிறுவனம் உள்ளது.அங்கு ரவிக்குமார் என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த மே மாதம் இவருடைய செல்போனிற்கு அழைப்பு வந்தது. அதில் பேசிய நரேஷ், யுவராஜ் ஆகியோர் தாங்கள் கணபதியில் உள்ள ஒரு நிதி நிறுவன அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறியுள்ளனர். அப்போது குறைந்த வட்டியில் கடன் தருவதாக கூறினர். இதை உண்மை என நம்பிய ரவிக்குமார் தனக்கு ரூ. 20 லட்சம் கடன் தேவைப்படுகிறது என்று கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் கடன் தொகை பெற வேண்டும் என்றால் ரூ. 1 லட்சத்துக்கு ரூ. 10 ஆயிரம் வீதம் ஆவணங்கள் தயார் செய்ய கட்டணமாக கொடுக்க வேண்டும் என்றும், மொத்தம் ரூ. 2 லட்சம் ஆகும் என்றும் கூறி உள்ளனர்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
2 லட்ச ரூபாய் வழங்குவதாக ரவிக்குமார் கூறினார். இதனையடுத்து கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு நரேஷ், யுவராஜ் வந்தனர். அப்போது அவர்களிடம் 2 லட்ச ரூபாயை ரவிக்குமார் வழங்கினார். பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் கடன் தொகை வாங்கித்தருவதாக கூறி சென்றனர். ஆனால் அதன் பிறகு அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் வேலூர் ஆற்காடு வாத்தியார் கோவிந்தராஜ் வீதியை சேர்ந்த நரேஷ் (31), திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தேவாங்கபுரத்தை சேர்ந்த யுவராஜ் (36) என தெரியவந்தது. இதையடுத்து காந்திபுரத்தில் பதுங்கி இருந்த அவர்களை ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp