கோவை மாவட்டம் போத்தனூர் சாரதா மில் ரோடு முத்தையா நகர் அருகே உள்ள இரண்டு தெருக்களில் நீண்ட நாட்களாக மின் விளக்குகள் தெரியாத காரணத்தால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இது சம்பந்தப்பட்ட நபர்களிடம் எடுத்துக் கூறியும் இந்த தெருக்களில் மின்விளக்கு எரியவில்லை என்று கூறப்படுகிறது. இந்த பகுதியில் சுமார் 600 வீடுகள் உள்ளன. இங்கே வசிக்கும் மக்கள் இந்த இரு சாலையையும் பயன்படுத்தி வருகிறார்கள். இதில் குழந்தைகள் முதல் பெண்கள், முதியவர்கள் என தினந்தோறும் பயணிக்கின்றனர்.
குறிப்பாக இந்தப் பகுதியில் குழந்தைகள் பயிலும் பள்ளிகளும் உள்ளன அடிக்கடி விஷ பூச்சி நடமாட்டம் உள்ளதால் மக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக் கொண்டு இந்த பகுதியில் மின்விளக்குகளை உடனடியாக சரி செய்து தர வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுகின்றன.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தலைமை நிருபர்,
-ஈசா.
One Response
சரியில்லாத சாலையும் மின் வெளிச்சமும் சுப்பரமணிகோனாரஅவிதி நுழைவு வழியும்