பூரணமதுவிலக்கை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை
வலியுறுத்தி இந்துஎழுச்சி முன்னணி மனு இன்று 22.06.2024 ஆம் தேதி இந்து எழுச்சி முன்னணி
தேனி நகர செயலாளர் திருதினேஷ் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியரைநேல்
சந்தித்து மனு ஒன்று கொடுத்துள்ளனர்.
அந்த மனுவில், கடந்த இரு தினங்களுக்கு முன்பாக கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி 55 பேர் பலியாகி உள்ளனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இந்த நிகழ்வானது தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இது நாள் வரை தமிழக அரசு இதற்கு உண்டான நடவடிக்கை எடுக்கவில்லை.
தமிழகத்தில் போதை கலாச்சாரம் கஞ்சா,சாராயம், மெத்தப்பெட்டமைன் போன்ற வஸ்துக்கள் மூலமாக தெரிய வருகிறது. இதனால் பள்ளி சிறார்கள் முதல் பெரியோர்கள் வரை
இப்போதைக்கு அடிமையாகி தங்கள் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டுள்ளார்கள். எனவே தமிழக அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு தமிழகத்தில் போதை வஸ்துக்கள் விற்பனை மற்றும் போதை கலாச்சாரத்தை அடியோடு அழித்து ஒழிக்க வேண்டும்.
மேலும் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்வுக்கு தி.மு.கவைச் சேர்ந்த
மதுவிலக்குதுறைஅமைச்சர் மற்றும் அந்ததுறைசார்ந்த அனைவரையும் துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து பதவி நீக்கம் செய்ய வேண்டுமென, மற்றும் தமிழகத்தில்
டாஸ்மாக் கடைகள் அதிக எண்ணிக்கையில்உள்ளது.
அதை படிப்படியாக குறைத்து பூரண மதுவிலக்கை கொண்டு வர தமிழக அரசை வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டது. இவர்களுடன் நகர பொதுச்செயலாளர் சிவராமன், நகர அமைப்பாளர்
அரண்மனை முத்துராஜ், நகரச் செயலாளர் புயல் எல்.ஆர்.ஐயப்ன், நகரத்துணைச் செயலாளர்கள் சீனிவாசன், திருகனகுபாடி நகரசெயற்குழு உறுப்பினர் கண்ணன் ஆகியோர்கள் உடன் இருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-தேனி, ரஞ்சித்.