சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாகுளம் கிராமத்தில் கள்ளச்சாராயத்தை அருந்தி 55 மேற்பட்டோர் உயிரிழந்தனர் நூற்றுக்கும் மேற்பட்டோர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றன. இந்த சம்பவமானது தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இதை அடுத்து அரசியல் கட்சியின் மற்றும் பொதுமக்கள் மத்தியில் திமுக அரசு மீது கடும் விமர்சனம் இருந்தது.
இந்த நிலையில் 24 /6/24 இன்று தமிழக முழுவதும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோல தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு தலைமையில் ஏராளமான அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், என்கே பெருமாள், எட்டையாபுரம் நகர செயலாளர் ராஜகுமார், கழுகுமலை நகர செயலாளர் முத்துராஜ், விளாத்திகுளம் நகர செயலாளர் மாரிமுத்து, எட்டையாபுரம் அவை தலைவர் கணபதி வார்டு கவுன்சிலர் அய்யம்மாள் கருப்பசாமி மற்றும் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள அதிமுக கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு அதிமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி மாபெரும் போராட்டத்தை நடத்தினார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
விளாத்திகுளம் செய்தியாளர்,
-ந.பூங்கோதை.