கோவை மாவட்டம் வால்பாறையில் கல்லூரி படிக்கும் மாணவச் செல்வங்களுக்கு விடுதி இல்லாமல் பெற்றோர்கள் வேதனை. நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம் வால்பாறை பரமசிவம் கோரிக்கை..
கோவை மாவட்டம் வால்பாறை உலகிலேயே இயற்கை மிகுந்த பலவேறு கால சூழ்நிலைக்கு ஏற்ப வாழ்வதற்கு உகந்த இடம். வால்பாறை அரசு கலைக்கல்லூரி உள்ளது. கல்லூரியில் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் மாணவ, மாணவிகளுக்கு போதுமான கல்லூரியில் விடுதி இல்லாமல் மிகவும் வேதனைப் படுகின்றன.
பெயரளவுக்கு மட்டுமே கல்லூரி விடுதி செயல்படுகிறது எனவும், மாணவ செல்வங்களுக்கு ஏற்ப கல்லூரி விடுதிகள் இருக்க வேண்டும், கல்லூரி படிக்கும் மாணவச் செல்வங்களை ஊக்குவிக்க அரசு பலவேறு நலத்திட்டங்களை அறிவிக்கிறது. ஆனால் வெளி மாவட்டங்களில் இருந்து வால்பாறை அரசு கல்லூரி படிக்கும் வரும் மாணவச் செல்வங்களின் விடுதி இல்லாமல் தனியார் வீடுகளில் அதிக வாடகை கொடுத்து பாதுகாப்பு இல்லாமல் படிக்க வேண்டிய அவல நிலை உள்ளது. தற்பொழுது SC,ST பிரிவுகளுக்குள் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே விடுதி உள்ளது. அதிலும் குறைந்த அளவு மட்டுமே விடுதியில் அனுமதிக்கிறார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
BC, MBC, OC.எம் மற்றும் வகுப்பைச் சேர்ந்த மாணவச் செல்வங்கள் தங்கி படிப்பதற்கு கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகமே வால்பாறை அரசு கல்லூரிகளில் வெளியூரிலிருந்து வரும் மாணவச் செல்வங்களுக்கு தங்கி படிக்க பாதுகாப்பான மாணவ மாணவி விடுதிகளை அரசு கலைக் கல்லூரி கட்டுப்பாட்டில் அமைத்து தர வேண்டும். அனைத்து வகுப்பினரும் தங்கிப் படிக்க விடுதிகளை அமைத்துக் கொடுங்கள். தற்பொழுது இருக்கும் விடுதிகளிலும் குடிநீர் பிரச்சனை தொடர்ந்து ஏற்படுகிறது.
மேலும் வால்பாறை அரசு கலைக் கல்லூரியில் மாணவச் செல்வங்களுக்கு அனைத்து வகுப்பினருக்கும் தங்குவதற்கு விடுதி இருந்தால் இன்னும் இப்பகுதியில் அதிக மாணவச் செல்வங்கள் இக்கல்லூரியில் சேர்வார்கள் இன்னும் அதிக பிரிவுகள் இக்கல்லூரியில் கொண்டு வரலாம் நிறைய மாணவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முடியும் அரசுக்கு அவப்பெயர் ஏற்படாமல் இருக்க மாவட்ட ஆட்சியாளர் அவர்களும், மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக கல்லூரி துவங்குவதற்கு முன் தங்கம் விடுதி ஏற்பாடு செய்து தர வேண்டும்என்று மனுவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பரமசிவம் குறிப்பிட்டுள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தலைமை நிருபர்,
-ஈசா.
One Response
தோழர் திரு. பரமசிவன் அவர்களின் பதிவு மிகவும் வரவேற்கத்தக்கது. வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாணவர்களுக்கான விடுதி கட்ட போதுமான காலி இடங்கள் உள்ளன. இவற்றை அரசு தனிக்கவனம் செலுத்தி மாணவர்களுக்கு தனியாக விடுதி கட்டிக் கொடுக்க முன் வரவேண்டும்.