கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியின் அருகில் அமைந்துள்ள லட்சுமி எஸ்டேட் நாகர்முடி டிவிஷனில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் பலவித கோரிக்கைகளும் சலுகைகளும் மறுக்கப்படுவதாக பொதுமக்கள் தலைமையில் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டும் பதில்கள் எதுவும் கிடைக்காத காரணத்தினால் AITUC DEW யூனியன் தலைமையில் பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு தீவட்டி ஊர்வலம் நடத்தினர்.
தீவட்டி ஊர்வலம் நடைபெறுவதற்கு பாலசுப்பிரமணியன் AITUC DEW UNION துணை கமிட்டி தலைவர் தலைமையில் சிவன்மலை கண்ணன் தேவன் டீ கம்பனி ஆபீஸ் முன்னிலையில் தேயிலைத்தோட்ட தொழிலாளர்களின் தலைமையில் நடைபெற்றது.தீவட்டி ஊர்வலம் நடைபெற்றதின் காரணம் தொழிலாளர்களுக்கு கடந்த 11 மாதங்களாக விறகுகள் கிடைப்பதில்லை என்பதை மிக முக்கிய காரணம்.
தொழிலாளிகளின் பல வித வீடுகளில் கேஸ் அடுப்பு மற்றும் கரண்ட் அடுப்பு இல்லை விறகு அடுப்பை நம்பியே இவர்கள் உணவு தயாரித்து தங்கள் அன்றாட வாழ்க்கைகளை கொண்டு செல்கின்றனர். கேஸ் சிலிண்டர் போன்ற பொருட்களுக்கு அதிகமான GST வரி காரணமாக ஒரு கேஸ் சிலிண்டர் வாங்க வேண்டும் என்றால் அதிக பணம் ஈடாகுவதன் காரணமாக பலவித தொழிலாளிகளின் வீடுகளில் பொருளாதாரம் பாதிப்பின் காரணமாக விறகு அடுப்புகளை நம்பிய வாழ்க்கை பயணம் தொடங்கி வருகின்றனர்.
இவர்களுக்கு கடந்த 11 மாதமாகவே விறகுகள் கிடைக்காதது பயங்கர ஏமாற்றத்தை உருவாக்கியுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கம்பெனி நிர்வாகிகளுடன் புகார்கள் அனைத்தும் எந்தவித பதில்களும் திரும்ப கிடைக்கவில்லை விரைவில் கிடைக்கும் விரைவில் கிடைக்கும் என பதில் கூறியும் இதுவரை கிடைக்காததால் பொதுமக்கள் தலைமையில் தீவட்டி ஊர்வலம் நடத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து தொழிலாளிகள் வசிக்கும் லயன்ஸ் வீடுகளில் தகுந்த முறையில் சிமெண்ட் ஒர்க் மற்றும் கதவுகள் ஜன்னல்கள் போன்றவைகள் சீரமைக்கவும் இல்லை. மழைக்காலங்களில் முன்னோடியாக லயன்ஸ் வீடுகளில் எந்த ஒரு பராமரிப்பும் கம்பெனி நிர்வாகம் ஏற்படுத்தவில்லை. மழை நேரங்களில் அனைத்து லயன்ஸ் வீடுகளிலும் மழைநீர் முழுவதும் வீட்டிற்குள் வந்துவிடுகிறது. அதுமட்டுமில்லாமல் இவர்களுக்கு சரியான முறையில் தொலைத்தொடர்பு வசதிகளும் கிடையாது.
தேயிலைத் தோட்டத்தில் கம்பெனி நிர்வாகம் ஆவரேஜான கிலோ கொழுந்துகள் வேண்டும் என தேயிலைத்த்தோட்ட தொழிலாளர்களிடம் கூறுகின்றனர் ஆனால் காடுகளில் மொத்தம் கலையாக இருப்பதினால் சரியான அளவு ஆவரேஜான கிலோ கொழுந்துகளும் கிடைப்பதில்லை, கலைகளை பறித்து எறிவதற்காக இவர்கள் ஆட்களையும் அனுமதிப்பதும் கிடையாது, இப்படியாகவே பலவித கொடுமைகளையும் அந்தப் பகுதி மக்கள் அனுபவித்து வருகின்றனர். மற்றும் இவர்களின் கோரிக்கைகளின் மிக உயர்ந்தது நீண்ட ஆண்டுகளாகவும் விடுமுறை எதுவும் எடுக்காமலும் டெம்பரவரி ஸ்டாப்பாக இருக்கும் நமது தேயிலைத் தோட்ட நண்பர்களை நிரந்தர ஊழியர்களாக எடுக்க கம்பெனி நிர்வாகிகள் மறுக்கின்றனர்.
இதுபோன்ற பலவித கோரிக்கைகளை முன் வைத்து தான் AITUC DEW யூனியன் தலைமையில் சிவன்மலை கண்ணன் தேவன் ஆபீஸ் முன்னிலையில் தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரின் முன்னிலையிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டது. மூணாரில் உள்ள அனைத்து எஸ்டேட் பகுதிகளிலும் இதுபோன்ற பிரச்சனைகள் நடப்பது தொடர்கதையாகி வருகிறது இவ்வித பிரச்சனைகளை தீர்வு காண கம்பெனி நிர்வாகம் சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
-மணிகண்டன் கா, மூணாறு.