கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள வால்பாறை புதிய பேருந்து நிலையம் கலைக் கல்லூரி சந்திப்பு காந்தி சிலை அருகாமையில் உள்ள மார்க்கெட் பகுதி அண்ணா சிலை இது போன்ற பகுதிகளில் உயர் மின் கோபுர விளக்கு உள்ளது.
இவை முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் சரிவர எரிவதில்லை இது பற்றி வால்பாறை நகராட்சி ஆய்வாளரிடம் புகார்கள் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை அந்த மின்விளக்குகள் ஒப்பந்ததாரரின் பொறுப்பில் உள்ளது என்று கூறுகின்றனர்.
இதனை பலமுறை அவர்களிடம் கூறி எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை மேலும் இப்பகுதியில் மழை காலங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிக அளவு உள்ளது. இப்பகுதிகளில் வரக்கூடிய சுற்றுலா பயணிகள் இரவு நேரங்களில் தங்கு விடுதி இல்லாமல் வாகனங்களிலே சாலைப் பகுதியில் தங்க வேண்டிய அவல நிலை உருவாகியுள்ளது.
இப்பகுதிகளில் சிறுத்தை புலி போன்ற வனவிலங்குகள் இரவு நேரங்களில் உலா வருவதால் ஏதாவது விபரீதம் ஏற்பட வாய்ப்புள்ளது எனவே இந்த மின் விளக்குகளை சரி செய்து பொதுமக்களுக்கு பயன்படும்படி செய்ய வேண்டும் என இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வியாபாரிகள் வாகன ஓட்டுனர்கள் வேண்டுகோள் விடுகின்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-திவ்யக்குமார், வால்பாறை.