கோவை மாவட்டம் வால்பாறையில் ஒரு வழி குறுகிய சாலைகள் உள்ளது. நான்கு சக்கர வாகனங்கள் கார் பார்க்கிங் வசதிகள் கிடையாது இதனால் வாகனங்கள் சாலைகளின் இரு புறம் நிற்பதால் பொதுமக்கள் நடப்பதற்கும் பயந்து பயந்து நடக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
வாகன ஓட்டுனர்களும் மிகவும் சிரமப்படுகின்றன. நகராட்சியில் மக்களின் அடிப்படை தேவையான எஸ்டேட் பகுதியில் இருக்கும் சாலைகளை சரி செய்யாமல் பொதுமக்கள் மருத்துவ வசதி கூட பெற முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றன. வால்பாறை நகராட்சி மூலம் தரம் இல்லாத சாலைகள்,கட்டிடங்கள் கட்டப்படுகிறது என்றும்.
அதும் சில நாட்களில் இடிந்து விழுகின்றன என்றும் , வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவ்வப்போது மருத்துவர் இல்லை எனவும் பெயரளவுக்கு மட்டுமே மருத்துவமனை உள்ளதாகவும் கூறுகின்றனர்.
வால்பாறை வனவிலங்கால் அடிக்கடி உயிரிழப்பு ஏற்படுகிறது இதையெல்லாம் பற்றி வனத்துறை கண்டு கொள்ளாமல் சுற்றுலா பயணியிடம் பணத்தை வசூல் செய்வதை ஒரே குறிக்கோளாக உள்ளது. ஆனால் எஸ்டேட் பகுதியில் வனவிலங்கு வரும்பொழுது உரிய பாதுகாப்பு வழங்குவதில்லை வால்பாறை அரசு கல்லூரியில் BC., MBC , மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி விடுதி கிடையாது.
இன்னும் இது போன்ற பல வேறு பிரச்சனைகள் வால்பாறை பகுதியில் உள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிப்பதாக மக்கள் கூறுகின்றனர் இதுபோன்ற பிரச்சனைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரடியாக ஆய்வு செய்து சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.
வருகின்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமிலாவது அல்லது மற்றொரு நாட்களில் நேரடியாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு செய்ய வேண்டும் பொதுமக்கள் கூறி வருகின்றனர் இந்த மனுவை . வால்பாறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி பரமசிவம் கோரிக்கை மனுவாக எடுத்துக்கொண்டு மாவட்ட திட்ட அலுவலரிடம் நேரடியாக எடுத்துக் கூறினார். அப்பொழுது அரசு உயர் அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தலைமை நிருபர்,
-ஈசா.