கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் வால்பாறை பகுதியில் சிங்கவால் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இதனால் வால்பாறை அருகாமையில் காமராஜர் நகர், துளசி நகர், அண்ணா நகர், ஆகிய பகுதிகளில் சிங்கவால் குரங்குகள் அதிக அளவு நடமாட்டம் உள்ளது.
இதனால் வீடுகளில் இருக்கக்கூடிய பொருட்களை சேதப்படுத்துவதுடன் மின்சார கம்பிகளில் ஏறி விளையாடுவதும் குடியிருப்பு பகுதியில் மேல் வரக்கூடிய மின் கம்பைகளில் சேதத்தை ஏற்படுத்தி வருவதாகவும், இதனால் வால்பாறை பகுதிகளில் பல இடங்களில் மின்சார சேதமும் நடைபெறுகிறது.
வனத்துறை அதிகாரிகள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கூறுவதுடன் நேற்று இரவு காமராஜர் நகர் பகுதியில் மின் கம்பியில் ஊஞ்சலில் ஆடிக்கொண்டு இருந்ததினால் இப்பகுதியில் மின்சார கம்பி அருந்து விழுந்து நீண்ட நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால் அப்பகுதி மக்கள் உடனே மின்சார வாரி அதிகாரி வாழ வைத்து உடனே அந்த மின்சார கம்பியை சரி செய்தனர் இதனால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது .
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-திவ்யா குமார்.