தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாச்சியர் அலுவலகத்தில் கோவில்பட்டி கோட்டாட்சியர் ஜெயின் கிறிஸ்டி பாய் தலைமையில் கடந்த ஜூன் 11-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் விளாத்திகுளம் வட்டத்திற்கு உட்பட்ட பொதுமக்களிடமிருந்து மொத்தமாக 67 மனுக்கள் பெறப்பட்டது.
அதில் இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல், உட்பிரிவு பட்டா மாறுதல் தொடர்பான மனுக்கள், பிறப்பு இறப்புச் சான்றிதழ் பெயர் திருத்தம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உதவித்தொகை மற்றும் குடும்ப அட்டையில் திருத்தம் உள்ளிட்ட மனுக்கள் பெறப்பட்டு அனைத்து மனுக்களும் பரிசினை செய்யப்பட்டு வருகின்றது.
மேலும், இறுதி நாளான இன்று (21.06.2024) 21 நபர்களுக்கு இணைய வழி பட்டா மாறுதல் உத்தரவு வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டிபாய் தலைமையில் வழங்கப்பட்டது. இதில் வருவாய் வட்டாட்சியர் இராமகிருஷ்ணன், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் விமலா, தலைமையிடத்து துணை வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், மண்டல துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அதுமட்டுமன்றி, வருவாய் தீர்வாயத்தில் பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் விரைவில் முடிவு செய்யப்பட்டு ஒரே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட வேண்டும் என கோட்டாட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
விளாத்திகுளம் செய்தியாளர்,
-ந.பூங்கோதை.