கோவை மாவட்டம் வால்பாறை தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளர் சங்கத் வால்பாறை உட்கோட்ட பேரவை கூட்டம் தியாகிகள் நினைவகம் சி ஐ டி யு அலுவலகத்தில் உட்கோட்ட துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
ttps://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கூட்டத்தில் மணிகண்டன் வாழ்த்துரை வழங்கினார் செந்தில்குமார் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார் இக்கூட்டத்தில் வால்பாறை கோட்டச் செயலாளர் சந்திர போஸ் கடந்த காலங்கள் நடைபெற்ற வேலை அறிக்கை வைத்தார். பொருளாளர் குமார் வரவு செலவு கணக்கு அறிக்கையை வைத்தார். கோட்டத் தலைவர் வெற்றிவேல் வாழ்த்துரை வழங்கினார். வால்பாறை சி ஐ டி யூ சங்கத்தின் பொதுச்செயலாளர் பரமசிவம் தமிழகத்தில் உள்ள சாமானிய மக்கள் முதல் அரசு ஊழியர் வரை வாழ்வாதாரத்தை பாதுகாக்க எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஆட்சியாளரின் கவனத்திற்கு கொண்டு சென்று உங்கள் தேவைகளை செய்து கொடுப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகும் வரும் காலங்களில் உங்கள் வாழ்வாதாரத்திற்கு பாதிப்புள்ள பிரச்சனைகளை எடுத்துச் சொல்லுங்கள் சம்பந்தப்பட்ட துறை ஆட்சியாளரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் பிரச்சனைகளை நிரந்தர தீர்வு காண்போம் என்று சிறப்புரை ஆற்றினார்.
கோட்டத் துணைத் தலைவர் வெள்ளிங்கிரி நிறைவு உரை ஆற்றினார் இக்கூட்டத்தில் பத்து தீர்மானங்கள் முன்மொழிவு பெற்றது 41 மாதமாக பணிநீக்க காலத்தை பனிக்காலமாக அரசு அறிவித்து உத்தரவிட வேண்டும், மழைக்காலங்களில் வழங்க வேண்டிய பாதுகாப்பு உபகரணங்கள் வேலை செய்வதற்கான உபகரணங்கள் வழங்க வேண்டும். இறந்து போன சாலை பணியாளர்களின் வாரிசுக்கு வேலை வழங்க வேண்டும் வால்பாறை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த சம்பளம் வழங்க வேண்டும். கோவை, திருப்பூர், பழனி, ஆகிய பகுதிகளில் இயங்கும் இரவு பேருந்துகள் பாதுகாப்பாக புதிய பேருந்துகளை இயக்க வேண்டும். வால்பாறை பகுதியில் படித்த இளைஞர்கள் நலனை கருத்தில் கொண்டு மாற்று தொழிலை கொண்டு வர வேண்டும். வனவிலங்கு தாக்குதலிலிருந்து இப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன முடிவில் பாபு நன்றிரை கூறினார்.
-M.சுரேஷ்குமார்.