தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் வெறிநாய் இரண்டுநாளாக 18 க்கும் மேற்பட்ட நபர்களை கடித்துள்ளது. வெறி நாய் கடித்த நபர்களுக்கு புதியம்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஓட்டப்பிடாரம் வ உ சி அரசு மருத்துவமனையிலும் தடுப்பூசி போடப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் புதியம்புத்தூர் நடுவகுறிச்சி பகுதியில் பாக்கியராஜ் (45)டூவீலர் மற்றும் கார் வாட்டர் சர்வீஸ் நடத்தி வருகிறார். மேலும் வாட்டர் சர்வீஸ் செட் அருகில் மூன்று செம்மரி ஆடுகளையும் வளர்த்து வருகிறார். மேலும் ஆடுகள் செட்டுக்கு வெளியே கட்டி போடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. செட்டுக்குள் பாக்கியராஜ் தூங்கியுள்ளார். இந்த நிலையில் பாக்யராஜ் நேற்று அதிகாலை 12.30 மணி அளவில் ஆடுகளின் சத்தம் கேட்டதை அடுத்து வெளியே வந்து பார்த்தபோது நாய் ஆடுகளை கடித்து விட்டு ஓடியது தெரிய வந்தது.
சிறிது நேரத்திலேயே இரு செம்மறி ஆடுகள் உயிரிழந்தது. மேலும் ஒரு செம்மறி ஆட்டிற்கு புதியம்புத்தூர் கால்நடை மருந்தகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வெறி நாய் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை நேரத்தில் புதியம்புத்தூர் இசக்கிஅம்மன் கோவில் அருகில் பன்றி கறி வாங்க சென்ற நபர்களை வெறி நாய் கடிக்க முயன்ற போது அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் வெறி நாயை அடித்து கொன்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாக்கியராஜ் கூறுகையில்,கடந்த இரு தினங்களாக ஏற்கனவே வெறிநாய் கடித்து பல பேர் காயம் அடைந்த நிலையில் என்னுடைய ஆடுகளை வெறிநாய் கடித்துள்ளது. இதில் இரு ஆடுகள் பலியான நிலையில் ஒரு ஆட்டிற்கு வெறிநாய் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஏற்கனவே வெறிநாயால் பரபரப்பு புதியம்புத்தூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு வரும் நிலையில் இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-எஸ் நிகில்
ஓட்டப்பிடாரம்.