தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே தனியார் பூ கம்பெனி பகுதியில் தூத்துக்குடி துறைமுகம் டூ மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்டர் மீடியனை அகற்றி முறையான பாதை வசதி ஏற்படுத்தி தர தெற்கு வீரபாண்டியாபுரம் பகுதி கிராம மக்கள் கோரிக்கை.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே தெற்கு வீரபாண்டியபுரம் கிராமம் அமைந்துள்ளது. மேலும் தெற்கு வீரபாண்டியபுரம் கிராம பகுதி பொதுமக்கள் மற்றும் ஓட்டப்பிடாரம் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தூத்துக்குடி மற்றும் தூத்துக்குடி பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் வேலை நிமித்தமாக சென்று வர தூத்துக்குடி துறைமுகம் டூ மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தினசரி சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் தெற்கு வீரபாண்டியபுரம் பகுதியில் உள்ள ரமேஷ் பிளவர்ஸ் தனியார் நிறுவனம் முன்பாக நான்கு வழி சாலை அமைக்கப்பட்டதிலிருந்து தேசிய நெடுஞ்சாலையின் சென்டர் மீடியன் அகற்றப்பட்டு நான்கு வழிச்சாலையில் இடது புறத்திலிருந்து வலது புறத்திற்கு செல்ல பாதை வசதி இருந்துள்ளது. இந்தச் சாலையை அப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக இந்தப் பாதையானது அடைக்கப்பட்டு சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் பாதை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஓட்டப்பிடாரம் மற்றும் தெற்கு வீரபாண்டிபுரம் பகுதியைச் சேர்ந்த சுமார் 10,000-க்கும் மேற்பட்டோர் இந்த வழியாக இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் சுமார் ஆறு கிலோமீட்டர் தூரம் வீணாக சுற்றி செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. இதில் குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் சுமார் ஆறு கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல முடியாமல் நான்கு வழிச்சாலையில் எதிர் திசையில் தவறான முறையில் சென்று சாலையை கடந்தும் வருகின்றனர்.
இதனால் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் இதில் உடனடியாக தலையிட்டு ரமேஷ் பிளவர்ஸ் தனியார் நிறுவனம் முன்பாக ஏற்கனவே இருந்த பாதை வசதியை மீண்டும் ஏற்படுத்தி தர வேண்டும் என தெற்கு வீரபாண்டியபுரம் கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .மேலும் இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ஓட்டப்பிடாரத்தில் நடைபெற்ற உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது . எனவே பாதை தொடர்பாக மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாத பட்சத்தில் பொதுமக்களை திரட்டி சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் எனவும் தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-எஸ் நிகில்
ஓட்டப்பிடாரம்.