கோவை மாவட்டம் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் பொள்ளாச்சி சார் ஆட்சியாளர் தலைமையில் வால்பாறை அரசு மருத்துவமனை நோயாளி நல சங்கம் கூட்டம் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நமது செய்தியின் எதிரொலி மற்றும் சமூக ஆர்வலர் கொடுத்த கோரிக்கையை ஏற்று வால்பாறையில் நோயாளி நலச் சங்க கூட்டம் சார் ஆட்சியாளர் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வால்பாறை அரசு மருத்துவமனையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்,அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் ,வால்பாறை அரசு மருத்துவமனையில் தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.
இது தொடர்பாக சமூக ஆர்வலரும் நோயாளி நலச் சங்க உறுப்பினருமான வால்பாறை P.பரமசிவம் பேசுகையில் உண்மையாலுமே கடந்த காலங்களை விட தற்பொழுது வால்பாறை அரசு மருத்துவமனை இப்பகுதியில் இருக்கும் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதற்கு நம்முடைய பாராட்டுக்கள்.
அதே சமயம் மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்களும் ஆள்பற்ற குறையும் தற்போது உள்ளது அதை நிவர்த்தி செய்ய வேண்டும்.
வால்பாறை பகுதியில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்யும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் இப்பகுதி அனைத்து தரப்பு மக்களும் அனைவரும் வால்பாறை அரசு மருத்துவமனையை நம்பியுள்ளனர்.
வால்பாறை பகுதியில் இருக்கும் அனைத்து எஸ்டேட் மருத்துவமனைகளும் முதல் உதவி சிகிச்சை மட்டுமே செய்யப்படுகிறது மற்ற அனைத்து சிகிச்சைக்கும் வால்பாறை அரசு மருத்துவமனையே நம்பி உள்ளது.
ஆகையால் எஸ்டேட் நிர்வாகம் நினைத்தால் வால்பாறை அரசு மருத்துவமனையிலே அனைத்து சிகிச்சைகளுக்கும் இங்கே சிகிச்சை அளிக்க தேவையான உபகரணங்களை வாங்கித் தரலாம், தூய்மை பணியாளர், பாதுகாவலர் போன்ற பணியிடங்களுக்கு எஸ்டேட் நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்து கொடுத்தால் மருத்துவமனை நம்பி வரும் அடித்தட்டு மக்கள் இன்னும் எளிய முறையில் சிகிச்சை பெறுவார்கள் என்பதால் இதற்கு எஸ்டேட் நிர்வாகம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து பதில் அளித்த தோட்ட உரிமையாளரின் சங்கத்தின் செயலாளர் கண்டிப்பாக தங்கள் கோரிக்கையை எழுத்து மூலமாக கொடுங்கள் என்று கூறினார் இக்கூட்டத்திற்கு கோவை மாவட்ட இணை இயக்குனர், வால்பாறை வட்டாட்சியர் ,வால்பாறை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர், வால்பாறை நகராட்சி தலைவி, மற்றும் மருத்துவர் இப்பகுதியில் இருக்கும் சமூக ஆர்வலர்கள் சமூக அமைப்புகள் நகராட்சி, பொதுப்பணித்துறை போன்ற முக்கிய துறையில் சேர்ந்த அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக நாமும் கூட்டத்தை ஆய்வு செய்தோம் உண்மையாலுமே கடந்த 16ஆம் தேதி சமூக ஆர்வலர் கொடுத்த கோரிக்கை குறித்து நமது நாளைய வரலாறு செய்தியில் பதிவு செய்திருந்தோம் இதை உடனடியாக கவனத்திற்கு எடுத்துக் கொண்டு அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுத்த பொள்ளாச்சி சார் ஆட்சியாளர் அவர்களுக்கும் வால்பாறை வட்டாட்சியர் அவர்களுக்கும் மாவட்ட இணை இயக்குனர் அவர்களுக்கும் வால்பாறை அரசு தலைமை மருத்துவருக்கும் மற்றும் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து அரசு உயர் அதிகாரிகளுக்கும் நகர மன்ற தலைவருக்கும் சமூக ஆர்வலர்களுக்கும்
நாளைய வரலாறு பத்திரிகையின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
-M.சுரேஷ்குமார்.