தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் பத்ரகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அருணாச்சல நாடார் என்பவரின் மகன் காசிப்பாண்டியன் (31). இவர் திருமணமாகாத நிலையில் தற்போது திருச்செந்தூர் கோவில் காவல் சரக்கத்தில் காவலராக(PC5127) பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை 11.30 மணியளவில் காவலர் காசிப்பாண்டியன் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த குளத்தூர் காவல் நிலைய போலீசார் பத்ரகாளியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள காசிப்பாண்டியன் வீட்டிற்குச் சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து காவலரின் தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் காவலர் காசிப்பாண்டியன் தனது குடும்ப பிரச்சினை காரணமாகதான் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும், கடந்த 10 நாட்களாக பணிக்குச் செல்லவில்லை என்றும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.