கோவை, ஆகஸ்ட் 28- இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனப் பிரிவில் இயங்கும் வலுவான செயலபாடுகளைக் கொண்டிருக்கும் உலகளாவிய முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது புத்தம் புதிய டிவிஎஸ் ஜூபிடர் 110-ஐ கோவையில் அறிமுகப்படுத்தியது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோவையில் நடந்த அறிமுக விழாவில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் கம்முட்டர் மார்க்கெட்டிங் அசோசியேட் வைஸ் ப்ரெசிடெண்ட் பினாய் ஆண்டனி, டிவிஎஸ் மோட்டார்ஸ் தமிழ்நாடு ரீஜனல் சேல்ஸ் மேனேஜர் பத்மநாபன் ஆகியோர் கலந்து கொண்டனர் டிவிஎஸ் ஜூபிடர் 110 ஸ்கூட்டரில் அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்திலான இன்ஜின் மற்றும் இவ்வாகனப் பிரிவிலேயே முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படும் அம்சங்கள் மற்றும் பல சிறப்பம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
புத்தம் புதிய டிவிஎஸ் ஜூபிடர் 110 அறிமுக விழாவில் பேசிய டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் கம்முட்டர் பிசினஸ் பிரிவின் மூத்த துணைத் தலைவர் மற்றும் கார்ப்பரேட் பிராண்ட் & மீடியா பிரிவின் தலைமை நிர்வாகியுமான அனிருத்தா கூறுகையில், மறுவடிவமைக்கப்பட்ட ஒன்றாக மேம்படுத்தி புத்தம் புதிய டிவிஎஸ் ஜூபிடர் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. வாகனம் ஓட்டும் போது தேவைக்கேற்ப முறுக்குவிசையை வழங்கும் திறன், பயன்படுத்தக்கூடிய இடவசதி மற்றும் மேம்பட்ட எரிபொருள்-திறன் ஆகிய சிறப்பம்சங்களுடன் இன்றைய நவீன தோற்றத்துடனான வடிவமைப்பில், அறிமுகப்படுத்தி இருப்பது, தனக்கென ஒரு வரிசையை முன் வைக்க செய்திருக்கிறது.
இந்த சிறப்பான அம்சங்களுடன் கூடிய தயாரிப்பாக இருப்பதால், வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியடைய செய்வதோடு, டிவிஎஸ் ஜூபிடருக்கான பிராண்ட்டை வலுப்படுத்தவும் செய்யும்’’ என்றார். டிவிஎஸ் ஜூபிடர் 110 ஸ்கூட்டரானது 113.3 cc, சிங்கிள் சிலிண்டர், 4 ஸ்ட்ரோக் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இதனால் 5.9 kW@6500 rpm ஆற்றலையும் 9.8 Nm@ 5,000 rpm முறுக்கு விசையையும், அசிஸ்ட் இல்லாமல் 9.2 Nm @ 5,000 rpm யையும் அளிக்கிறது. மேலும் இதில் இடம்பெற்றிருக்கும் முன்னோடித்துவமிக்க தொழில்நுட்பமானது, இதற்கு முந்தைய மாடலுடன் ஒப்பிடும் போது 10% கூடுதல் மைலேஜ்ஜை அளிக்கிறது.
புதுமையான iGO Assist தொழில்நுட்பம் இதற்கு முக்கிய காரணமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. தானியங்கி முறையில் வாகனத்தை இயங்க தொடங்கவும், இயக்கத்தை நிறுத்தவும் உதவும் ஆட்டோ ஸ்டார்ட்-ஸ்டாப் வசதி மற்றும் வாகனங்களை முந்திச் செல்லும் போதும், உயரமான பகுதிகளில் ஏறும் போதும் பேட்டரியில் இருந்து ஆற்றலை முழுமையாக செயல்படுத்தி மேம்பட்ட செயல்திறனை வெளிப்படுத்த ISG எனப்படும் ஒருங்கிணைந்த ஸ்டார்டர் ஜெனரேட்டர் வசதியும் இடம்பெற்றுள்ளது.கண்களைக் கவரும் ஸ்டைலையும், பெரும் உற்சாகத்தையும் ஒன்றிணைக்கிறது: இன்ஃபினிட்டி விளக்குகள்.அபாரமான செயல்திறனுடனான அசத்தலான மைலேஜ்: புத்தம் புதிய ஜூபிடர் 110 இன்ஜின் மற்றும் iGO Assist தொழில்நுட்பம் இணைந்து 10% அதிக மைலேஜையும் சிறந்த பிக்-அப்பையும் அளிக்கின்றன.அன்றாட யதார்த்த வாழ்க்கை செளகரியங்களுடன் மேம்பட்ட வசதிகள்: முன் பக்கம் எரிபொருள் நிரப்பும் வசதி, அமர்வதற்கு செளகரியமான நீண்ட இருக்கை, கால்களை வைத்து கொள்ள விசாலமான லெக் ஸ்பேஸ் மற்றும் பாடி பாலன்ஸ் தொழில்நுட்பம் கூடுதல் செளகரியத்தையும் வசதியையும் அளிக்கின்றன.புதுமையுடன் கூடிய பாதுகாப்பு: இருக்கைக்கு கீழ் இரண்டு ஹெல்மெட்களை பாதுகாப்பாக வைக்கும் இட வசதி, உலோகத்தினால் வடிவமைக்கப்பட்ட உடற்பகுதியான மெட்டல் மேக்ஸ் பாடி, ஃபாலோ மீ ஹெட்லேம்ப்ஸ், டர்ன் சிக்னல் லேம்ப் ரெஸ்ட், எமர்ஜென்சி பிரேக் வார்னிங் போன்ற அம்சங்கள் பாதுகாப்பாக பயணிக்க உதவுகின்றன.தொழில்நுட்பம் வழங்கும் மேம்பட்ட வசதிகள்: முழுவதுமாக டிஜிட்டல் ப்ளுடூத் தொழில்நுட்பத்தினால், இயங்கும் குரல் அழைப்பு மற்றும் SMS, செல்லுமிடங்களுக்கான பாதையை தெரிந்து கொள்ள உதவும் குரல் உதவியுடன் கூடிய நேவிகேஷன் வாகனம் எங்கிருக்கிறது என்பதை கண்டுபிடிக்க உதவும் ஃபைன் மை வெஹிகிள் உள்ளிட்ட இன்னும் பல அம்சங்கள் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றன.
MetalMaxx அளிக்கும் உத்தரவாதம் – உலோகத்திலான எரிபொருள் நிரப்பும் பகுதி, ப்ரண்ட் ஃபெண்டர் மற்றும் சைட் ,இரண்டு ஹெல்மெட்கள் வைப்பதற்கான இடவசதி,எமர்ஜென்சி பிரேக் எச்சரிக்கை ,டர்ன் சிக்னல் லேம்ப் ரீசெட் ,ஃபாலோ மீ ஹெட்லேம்ப் என புத்தம் புதிய டிவிஎஸ் ஜூபிடர் 110 ஸ்கூட்டரில் சிறந்த பாதுகாப்பு மற்றும் செளகரியமளிக்கும் வசதிகளுடனான அம்சங்களைக் கொண்டுள்ளது.டான் ப்ளூ மேட், கேலக்டிக் காப்பர் மேட், டைட்டானியம் கிரே மேட், ஸ்டார்லைட் ப்ளூ க்ளாஸ், லூனார் ஒயிட் க்ளாஸ் மற்றும் மீட்யோர் ரெட் என கண்களைக்கவரும் அட்டகாசமான வண்ணங்களின் கவர்ச்சிகரமான கலவைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
79,000/- ரூபாய் [எக்ஸ்-ஷோரூம், தமிழ்நாடு )விலையில் தொடங்கும் இந்த புதிய ஸ்கூட்டர் டிரம், டிரம் அலாய், டிரம் எஸ்எக்ஸ்சி மற்றும் டிஸ்க் எஸ்எக்ஸ்சி ஆகிய 4 வகைகளில் கிடைக்கிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.