M. சண்முகபுரம் கிராமத்தில் குடிநீருடன் கலக்கும் கழிவு நீர் – புகார் அளித்தும் மெத்தனத்தில் அதிகாரிகள்!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள M. சண்முகபுரம் கிராமத்தில் வல்லநாடு கூட்டுக் குடிநீர் திட்டத்தின்கீழ் பொது மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இக்கிராமத்தில் பிள்ளையார் கோவில் தெருவில் அமைந்துள்ள இந்த குடிநீர் குழாய்கள் உடைந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் புகார் கூறியும் தற்போது வரை உடைந்து காணப்படும் இந்த குடிநீர் குழாய் இணைப்பை சரி செய்ய முன்வராத காரணத்தினால் கால்வாய்க்குள் அமைந்துள்ள இந்த குழாய்களில் கழிவுநீர் புகுந்து பொதுமக்களுக்கு குடிநீருடன் – கழிவு நீர் கலந்துதான் வருகிறது.
இத்தகைய சுகாதாரமற்ற குடிநீரை பொதுமக்கள் குடிப்பதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாந்தி, பேதி, காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் குடிநீர் குழாய் இணைப்பு உடைந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் உடைப்பை சரி செய்யாததால் லட்சக்கணக்கான லிட்டர் நீர் வீணாகி வருவதாகவும் அப்பகுதி கூறுகின்றனர். எனவே உடனடியாக பொதுமக்களின் நலன் கருதி குடிநீருடன் கழிவு நீர் கலப்பதை தடுத்து சுத்தமான குடிநீரை பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.