கோவை மாவட்டம் பொள்ளாச்சி கெங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த காண்ட்ராக்டர் சக்தி குமார் சமத்தூரைச் சேர்ந்த கணேசமூர்த்திக்கு 2,50,000 ரூபாயும், கருப்பம்பாளையத்தைச் சேர்ந்த சாதிக் பாஷா என்பவபருக்கு 1,80,000 ரூபாயும் ஆவல் சின்னாம்பாளையத்தைச் சேர்ந்த செந்தில்நாதனுக்கு 8 லட்சம் ரூபாயும் கடனாக கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கொடுத்த பணத்தை சக்தி குமார் திருப்பிக் கேட்டபோது மூவரும் பணத்தைக் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது.
இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில் என்னிடம் கடன் வாங்கி திருப்பி தராத மூவரும்தான் எனது மரணத்துக்கு காரணம் என செல்போனில் வீடியோ பதிவு செய்து அதை வாட்ஸ் அப் மூலம் தனது உறவினர்களுக்கு அனுப்பிவிட்டு தனது மாமனார் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து கோட்டூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்,
-M.சுரேஷ்குமார்.