தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (57). செக்யூரிட்டி. இவர் திருமணம் ஆகி சில ஆண்டிற்கு முன் விவாகரத்து பெற்றார். 2-வது திருமணம் செய்ய முயற்சி செய்து வந்தார். அப்போது, கோவை ஆர். எஸ். புரம் மேற்கு பொன்னுரங்கம் வீதியை சேர்ந்த விஸ்வதர்சினி(48) என்பவரின் அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் பேசி திருமணம் செய்ய முடிவு செய்ததாக தெரிகிறது. இந்நிலையில், கடந்த 2020ம் ஆண்டு முத்து ராமலிங்கத்திடம், விஸ்வதர்சினி தன் மகன் வெளிநாட்டில் கல்லூரியில் படித்து வருகிறார். அதற்கு 2 லட்ச ரூபாய் வேண்டும் என கேட்டார். இதனை தொடர்ந்து முத்துராமலிங்கம் 2 லட்ச ரூபாய் கொடுத்தார். ஆனால் அதன்பின்பு விஷ்வதர்சினி பணத்தை திருப்பி தரவில்லை. முத்து ராமலிங்கத்தை திருமணம் செய்யாமலும் ஏமாற்றினார். இது குறித்து ஆர். எஸ். புரம் போலீசில் முத்துராமலிங்கம் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். சென்னை ராயப்பேட்டை மகளிர் போலீசிலும் அவர் மீது இதேபோன்ற ஒரு வழக்கு பதிவாகியிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த விஸ்வதர்சினியை முத்துராமலிங்கம் அளித்த புகாரின் பேரில், ஆர். எஸ். புரம் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு கோவையில் பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
சி.ராஜேந்திரன்.