கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளான வால்பாறை, ஆனைமலை, மேட்டுப்பாளையம். பேரூர் மற்றும் மதுக்கரை ஆகிய வட்டங்களை சுற்றியுள்ள சுற்றுலா பகுதிகளான சின்னக்கல்லாறு,
ஆழியாறு, சோலையாறு, கூலாங்கல்லாறு, அப்பர் நீரார், கீழ் நீரார், காடாம்பாறை, குரங்கு நீர் வீழ்ச்சி, கோவை குற்றாலம், பில்லூர், மற்றும் கீழ் பவானி ஆகிய இடங்களில் தற்போது தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் நிலச்சரிவு, நீரில் மூழ்குதல் போன்ற எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்படலாம். இதனை தவிர்க்கும் பொருட்டு பருவமழை காலங்களில் பொதுமக்கள் இந்த பகுதிகளுக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும்.” இவ்வாறு கலெக்டர் கிராந்திகுமார் பாடி கேட்டுக் கொண்டுள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.