தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள், மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சி முகாம். விளாத்திகுளம் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சி மற்றும் பி.எல்.ஓ .செயலி பயன்படுத்துதல் தொடர்பான பயிற்சி முகாம் நடைபெற்றது.
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு (213) உட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு பி.எல்.ஓ செயலியை பயன்படுத்துதல் தொடர்பான பயிற்சி முகாம் விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. முகாமிற்கு விளாத்திகுளம் தாசில்தார் ராமகிருஷ்ணன் தலைமை வகித்து பேசினார்.
முகாமில் 2025 ஜனவரி1ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலினை திருத்தம் மேற்கொள்ள சுருக்க முறை திருத்தம் 2025க்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளபடி, 2024 ஆகஸ்ட் 20 முதல் அக்டோபர் 18 வரைநடைபெற உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர்களின் விபரங்களை சரி பார்க்கும் பணி மற்றும் வாக்குச்சாவடிகளை மறு வரையறை செய்தல் உள்ளிட்ட களப்பணி தொடர்பாக பயிற்சி, பி.எல்.ஓ செயலி பயன்படுத்துதல் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சியில் தேர்தல் துணை தாசில்தார் பாலமுருகன்,தேர்தல் பிரிவு முதல் நிலை வருவாய் ஆய்வாளர் பாலமுருகன்,கணினி இயக்குநர் பாரதிசெல்வன், அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்,
-ந.பூங்கோதை.