கோவை போத்தனூர் போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் ராபின் சிங் (27). கோவை மாநகர ஆயுதப்படையில் ஏட்டாக பணியாற்றுகிறார். இவர் சம்பவத்தன்று வேலை முடிந்து வீட்டிற்கு சென்றார்.
பிறகு சொந்த வேலை விஷயமாக கோவைக்கு வந்தவர் புரூக் பீல்டு ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் பைக்கை நிறுத்தி விட்டு கடைக்கு சென்றார்.
அதன் பிறகு மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது அவரது பைக்கை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ராபின் சிங் ஆர். எஸ். புரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது ஸ்கூட்டியில் ஹெல்மெட் அணிந்து வந்த ஆசாமி ஒருவர் அவரது வாகனத்தை நிறுத்துகிறார். பிறகு ஹெல்மெட்டை கழட்டாமல் ராபின் சிங்கின் புதிய பைக்கை திருடி கொண்டு அங்கிருந்து சென்று விடுகிறார். இந்த காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக ஹெல்மெட்டை கழட்டாமல்திருடன் பைக்கை திருடி சென்றுள்ளான். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
சி.ராஜேந்திரன்.