தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிவஞானபுரத்தில் கோவில்பட்டி சுகாதாரத்துறை மாவட்ட மருத்துவ அலுவலர் நேர்முக உதவியாளர் அதிரடியாக ஆய்வில் மேற்கொண்டனர். பெட்டி கடையிலிருந்து பெரிய ஹோட்டல் வரைக்கும் அனைத்து கடைகளிலும் ஆய்வுகள் மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் போது கடைகளில் மக்களுக்கு நோயை விளைவிக்கும் பொருள்கள் சிரட் பி டி புகையிலை இதை விற்பனை செய்யக்கூடாது, தடை விதிக்கப்பட்ட பொருள் என்றும் மற்றும் மல்லிகை கடைகளில் ஆய்வு செய்து பலசரப் பொருட்களை கேரி பையில் கொடுக்கக் கூடாது என்றும் கேரிப்பை தடை விதிக்கப்பட்டது என்றும் எடுத்துக் கூறினார்.
மற்றும் டீக்கடையை ஆய்வு செய்த அதிகாரி டீக்கடையில் வடை செய்தித்தாளில்
கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதையும் எடுத்துக் கூறி செய்தித்தாளில் கொடுக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தினார். பதிவு செய்யப்படாத பேப்பரில் வடை மடித்து கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
பின்பு சிக்கன் ரைஸ் கடையில் சிக்கனில் கலர் பொடி சேர்க்கக் கூடாது என்பதையும் கூறினார். இந்த அதிரடி ஆய்வு மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் ஜெகவீரபாண்டியன் உத்தரவின் பேரில் நடந்ததாகவும் கோவில்பட்டி சுகாதாரத்துறை மாவட்ட மருத்துவ அலுவலர் நேர்முக உதவியாளர் மதுரம்பிரைட்டன் அவர்களின் தலைமையில் சுகாதார துறையை சார்ந்த குழுவாக வந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்,
-ந.பூங்கோதை.