தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே தருவைகுளத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமில் எம்எல்ஏ சண்முகையா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஊரகப் பகுதிகளில் மக்களின் இருப்பிடம் தேடி நேரடியாக கோரிக்கைகளை பெற்று அவர்களுக்கு தீர்வளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கீழ அரசடி மேலஅரசடி தருவைகுளம் வேப்பலோடை ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களுக்காக ஓட்டப்பிடாரம் அருகே தருவைகுளம் தூய கேத்தரின் தொடக்கப் பள்ளியில் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.தொடர்ந்து பொதுமக்களின் மனுக்களை பதிவேற்றம் செய்யப்படுவதையும் பார்வையிட்டு 18 நபர்களுக்கு வீடுகள் பழுது பார்ப்பதற்கான ஆணைகளையும், விவசாயிகளுக்கு தார்ப்பாய்களையும் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் .
நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் ஆனந்த், நில எடுப்பு வட்டாட்சியர் செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி வருவாய் ஆய்வாளர் வசந்த் குமார் பஞ்சாயத்து தலைவர்கள் காடோடி ,வேல்கனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-எஸ் நிகில் ஓட்டபிடாரம்.