கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியில் அருகில் அமைந்துள்ள குண்டலை எஸ்டேட் மற்றும் செண்டுவாரை பகுதியில் நிலை உறுதிப்படுத்திய படையப்பா குண்டலை எஸ்டேட்டில் வேளாங்கண்ணி ஸ்டெல்லா என்பவர்களின் தோட்டத்தில் காரட்டுகளை தின்றது மற்றும் குண்டலை எஸ்டேட் பகுதியில் உள்ள மனோகரன் என்பவரின் வாழை மரங்களையும் தின்றது, மற்றும் பவன்ராஜ் என்பவரின் வாழை மரங்களையும் தின்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பின்னர் குண்டலை எஸ்டேட்டின் அங்கும் இங்குமாக திரிந்து கொண்டிருந்த படையப்பா ஜான் பிரியா என்பவரின் முட்டைகோஸ் தோட்டத்தை முற்றிலுமாக முடித்தது. பின்னர் அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருந்த படையப்பா யானை செண்டுவாரை பகுதிக்கு உலாவிக் கொண்டிருந்தது. அங்கு சென்று செண்டுவாரை டாப் பகுதிகளில் கேரட் தோட்டத்தில் உலா வந்து செண்டுவாரை லோயர் டிவிஷனில் வந்து மூன்று சக்கர வாகனத்தை சேதப்படுத்தியது.
மற்றும் அன்று இரவு முழுவதுமாக செண்டுவாரை லோயர் டிவிஷனிலேயே நிலை உறுதிப்படுத்தி இருந்த படையப்பா யானை அடுத்த நாள் காலை குண்டலை எஸ்டேட்டில் மீண்டும் உலா வர ஆரம்பித்தது. தற்பொழுது குண்டலை எஸ்டேட் பகுதிகளிலேயே உலா வந்து கொண்டிருக்கிறது. படையப்பா காட்டு யானையால் பல நபர்களுக்கும் விவசாயம் பாதித்து வருகிறது. விவசாயத்தை நம்பி வாழ்க்கை பயணம் தொடரும் நண்பர்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் படையப்பா யானையை பிடித்து வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு முயற்சிக்க வேண்டும் என பொதுமக்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-மணிகண்டன் கா
மூணாறு கேரளா.