கோவை மாவட்டம் வால்பாறை கடும் மழையிலும், அட்டை கடி ரத்தத்திலும்,மேடு பள்ளத்திலும்,வனவிலங்கு தொல்லை மத்தியில், குறைந்த சம்பளத்தில் எதிர்கால வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்ற சூழ்நிலையில் 99 சதவீத பேர் அரசு வழங்கும் இலவச அரிசியே நம்பி உள்ளனர். நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில் நியாயவிலைக் கடையில் மாதத்திற்கு ஒரு பகுதிக்கு நல்ல அரிசியும், மற்ற பகுதிகளுக்கு மோசமான அரிசியும் அடுத்த மாதம் மோசமான வழங்கிய பகுதிக்கு நல்ல அரிசியும், நல்ல அரிசியும் வழங்கிய பகுதிக்கு மோசமான அரிசியும் வழங்குவது வாடிக்கையாகிவிட்டது. இது தொடர்பாக மாதம் நல்ல அரிசி வழங்க வேண்டும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்புவதும் சந்திப்பதும் எங்களுக்கு நேரமும் மட்டும் பண விரயமும் ஆகிறது என்று மிக வருத்தத்துடன் பதிவு செய்தார்.
இந்நிலையில் இது குறித்து புதிதாக பொறுப்பேற்றுள்ள வட்ட வழங்கும் அலுவலரிடம் புகார் மனுவே வால்பாறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் P.பரமசிவம் மனு கொடுத்துள்ளார். மேலும் நம்மிடம் இது குறித்து கூறியதாவது வனவிலங்கு தொல்லையால் காடுகளுக்குச் சென்று விறகுகளை கொண்டு வந்து அடுப்பு எரிக்க முடியாது இப்பகுதியில் உள்ள அடித்தட்டு மக்களுக்கு குறைந்த சம்பளம், சமையல் எரிவாயு விலையோ அதிகம், தற்பொழுது நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசி சமைப்பதற்கு வெகு நேரம் ஆகிறது சாப்பாடும் மிகவும் கொட்டையாகவும் உள்ளது இதனால் சாப்பிட முடியாமல் அப்படியே சாப்பிட்டாலும் வயிற்று வலி போன்ற நோய்கள் ஏற்படுகிறது
இதையெல்லாம் கருத்தில் கொண்டு புதிதாக வால்பாறை பகுதிக்கு வந்திருக்கும் வட்ட வழங்கும் அலுவலர் எளிதில் சமைத்து சாப்பிடுவதற்கு உகந்ததாக இருக்க வேண்டும் நியாய விலை கடைகளில் எப்பொழுதும் அரசு வழங்கும் அனைத்து பொருள்களும் தங்கு தடையில்லாமல் கிடைக்க வேண்டும் வாரத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் கடைகள் திறந்திருக்க வேண்டும். தற்பொழுது வழங்கப்படும் நாட்களில் வெளியூரோ, மருத்துவமனையோ அவசர தேவைக்கு சென்று விட்டால் மீண்டும் வந்து நியாய விலைக் கடைகளில் பொருள் வாங்க முடியாத சூழ்நிலை உள்ளது. இப்ப பிரச்சனைகள் எல்லாம் நிரந்தர தீர்வு ஏற்பட வட்ட வழங்கும் அலுவலர் செய்து தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
செய்தியாளர்
-M.சுரேஷ்குமார்.