விமானப் பயணத்தின் போது நம்முடன் எடுத்துச் செல்லும் பொருட்களுக்கு, விமான நிறுவனங்கள் சில கடுமையான நிபந்தனைகளை விதிக்கின்றன. ஏனெனில் விமானப் பயணம் என்பது பல உயிர்கள் சம்பந்தப்பட்டது. விமானத்தில் பயணம் செய்யும் போது சில விதிகளை பின்பற்ற வேண்டும். நீங்கள் விமானத்தில் ஏறும்போது உங்களுடன் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படாத பல விஷயங்கள் உள்ளன. கூர்மையானப் ஆயுதங்கள், துப்பாக்கிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் உட்பட பல பொருட்களை விமானத்தில் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. இது தவிர, விமானத்தில் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்ட அன்றாட சமையலறைப் பொருளும் உள்ளது.
இந்திய சமையலறைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் இது. ஆனால் இந்த பொருளை ஏன் விமானத்தில் அனுமதிப்பதில்லை என்று உங்களுக்குத் தெரியுமா? அந்த பொருள்தான் தேங்காய். விமானத்தில் தேங்காய் கொண்டு செல்ல முடியாது என விமான நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முக்கிய காரணம், தேங்காயில் அதிக அளவு எண்ணெய் உள்ளது மற்றும் இந்த எண்ணெய் எரியக்கூடிய பொருளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பு காரணங்களுக்காக விமானத்தில் தேங்காய் கொண்டு செல்ல அனுமதி இல்லை.
இதுவரை, பயணிகள் தங்கள் கைப்பையில் மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். இருப்பினும், புதிய விதிமுறைகள் இப்போது சில மருந்துகளை துபாய்க்கு விமானங்களில் எடுத்துச் செல்வதற்கும் தடை விதித்துள்ளன. இந்த மருந்துகள் குறித்த மாற்றங்கள் குறித்து பயணிகள் அவசியம் அறிந்திருக்க வேண்டும் மற்றும் புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி அனுமதிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே பேக் செய்வதை உறுதிசெய்ய வேண்டும்.
துபாய் பயணத்திற்கு தயாராகும் போது, கையில் எடுத்துச் செல்லக்கூடிய பொருட்கள் மற்றும் சோதனை செய்யப்பட்ட சாமான்கள் இரண்டிலும் அனுமதிக்கப்பட்ட மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்கள் என்ன என்பதை அறிந்து கொள்வது அவசியம். பலர் விமானங்களில் எடுத்துச் செல்வது சட்டவிரோதம் என்று கருதப்படும் பொருட்களை அவர்களுக்கேத் தெரியாமல் எடுத்துச் செல்கிறார்கள். கொக்கெய்ன், ஹெரோயின் மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களும், வெற்றிலை, தந்தம், சூதாட்ட சாதனங்கள் மற்றும் புறக்கணிப்புக்கு உட்பட்ட நாடுகளின் பொருட்கள் போன்ற பொருட்களும் இதில் அடங்கும்.
கூடுதலாக, அச்சிடப்பட்ட பொருட்கள், கலைப்படைப்புகள், அசைவ உணவுகள் உள்ளிட்ட சில உணவுப் பொருட்கள் மற்றும் கள்ளப் பணம் கூட தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறுவது பயணிகளுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
உங்கள் துபாய் பயணத்தின் போது, சில தயாரிப்புகள் நாட்டிற்குள் கொண்டு வரப்படுவதற்கு முன் பணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும். தாவரங்கள், உரங்கள், புத்தகங்கள், சில மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், அழகுசாதனப் பொருட்கள், மின்னணு சாதனங்கள், மதுபானங்கள், தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள், இ-சிகரெட்டுகள் மற்றும் மின்னணு ஹூக்காக்கள் ஆகியவை இதில் அடங்கும்.
எபப்டிப்பட்ட தேங்காயை எடுத்துச் செல்லலாம்?
கொப்பரை அல்லது தேங்காய்த் தூள் தவிர்த்து முழு தேங்காய்களும் சரிபார்க்கப்பட்ட சாமான்களில் மட்டுமே கொண்டு செல்லப்பட வேண்டும். ஆனால், கோவில்களில் பிரசாதமாக வழங்கப்படும் தேங்காய்களை பாதியாக உடைத்து கொண்டு செல்வதில் இப்போதும் குழப்பம் உள்ளது.
மேலும் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி அமைப்பானது இருமுடி கட்டு, நெய் நிரப்பப்பட்ட தேங்காய் உள்ளிட்ட பிரசாதங்களைக் கொண்ட புனிதப் பையை எடுத்துச் செல்ல வரையறுக்கப்பட்ட அனுமதியை வழங்கியுள்ளது. ஆனால் இது சபரிமலை சீசனில் மட்டும்தான்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
-MMH.