மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி ஊராட்சிப் பகுதிகளில் உள்ள கிராம பொதுமக்களின் குறைகளை பூர்த்தி செய்யும் வகையில், கிராமப் பகுதியில் மக்களுடன் முதல்வர் என்ற சிறப்பு முகாம் ஏற்பாடு செய்து, அமைக்கப்பட்ட முகாமிற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில்,வருவாய்,ஊராட்சி, மின்வாரியம், பொதுப்பணித்துறை, வேளாண்மைதுறை, மருத்துவத்துறை என அரசு துறையில் உள்ள அனைத்து துறைகளையும் அழைத்து பொது மக்களிடம் மனுக்களைப் பெற்று அந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் கிராமத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில், குளத்தூர் புளியங்குளம்,கீழ வைப்பார்,வைப்பார், பூசனூர், மார்த்தாண்டம்பட்டி, அயன்செங்கல்படை, T. சுப்பையாபுரம், வீரபாண்டியாபுரம்,விருசம்பட்டி, வேடப்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களாக நடைபெற்ற இந்த சிறப்பு முகாமில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி கலந்து கொண்டு, கோரிக்கை மனுக்களை பதிவேற்றம் செய்வதை பார்வையிட்டு பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன், விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், சீனிவாசன் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி செல்லபாண்டியன், குளத்தூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மறைச்செல்வி பாலமுருகன் மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்,
-ந.பூங்கோதை.