தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மாவட்ட சுகாதார அலுவலர் Dr. ஜெகவீரபாண்டியன் அவர்களின் அறிவுறுத்தலின்படி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பேரிலோவன்பட்டி சார்பில் இரத்ததான முகாம் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் மாவட்ட இரத்த வங்கி மருத்துவ அலுவலர் Dr.வெங்கடேசன் தலைமையில் மருத்துவக் குழு மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் Dr. இன்பராஜ் , மருத்துவ அலுவலர்கள், நலக் கல்வியாளர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர், மருத்துவம் இல்லா மேற்பார்வையாளர்,சுகாதார ஆய்வாளர்கள், நடமாடும் மருத்துவக் குழுவினர், கல்லூரி முதல்வர் ,நிர்வாகிகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்,
-ந.பூங்கோதை.