கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா வால்பாறை பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
வால்பாறை அடுத்துள்ள சேக்கல் முடி பகுதியில் வசித்துவருபவர் முத்துக்குமார். அவருடைய மகன் முகில் மூன்றரை வயது. அப்பகுதியில் உள்ள குழந்தைகள் காப்பகத்திற்கு முத்துக்குமார் தனது மகனை விட சென்றார்.
அப்பொழுது காற்றுடன் கூடிய மழையில் நனைந்து சென்று கொண்டிருக்கும் பொழுது திடீரென அப்பகுதியில் உள்ள சாலையோர பகுதியில் வேருடன் மரம் ஒன்று சாய்ந்து முத்துக்குமார் மற்றும் அவருடைய குழந்தை முகில் இவர்களின் மேல் சாய்ந்து விழுந்தது. மரம் சாய்ந்ததில் குழந்தை அந்த இடத்திலே இறந்து விட்டனர்.
முத்துக்குமார் பெரும் காயத்துடன் உயிர் காப்பினர். இந்த சம்பவம் இன்று காலை 8 மணி அளவில் நடந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், தெய்வத்தோட்ட தொழிலாளிகள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-திவ்யக்குமார்.