தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரம் தாலூகா தருவைகுளம் மீனவ கிராமம் அருகே உள்ள பட்டிணமருதூரில் ஹரப்பா நாகரிகத்தை விட தொன்மையான செவ்வக வடிவ கிணறு மற்றும் குடுவைகள் கண்டுபிடிப்பு. தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சி செய்து 2000 வருடங்களுக்கு முன்பு உள்ள பண்டைய நாகரிகத்தை வெளிக்கொண்டு வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலூக தருவைகுளம் மீனவ கிராமம் அருகில் உள்ள பட்டிணமருதூரில் ‘டோலகா ஹரப்பா’ நாகரீகத்தினை விட தொன்மையானதாக தென்படும் மணல் கற்களால் வடிவமைக்கப்பட்ட செவ்வக வடிவ கிணற்றையும் அதனை சுற்றியுள்ள சுமார் 250 ஏக்கர் பரப்பளவு உள்ள இடத்தில் நிறைந்துள்ள பண்டைய கால நாகரிகங்களை வேலி அடைத்து தொல்லியல் துறை பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியினை சேர்ந்த வரலாறு மற்றும் தொல்லியல் ஆர்வலர் ராஜேஷ் என்பவர் பட்டிணமருதூர் கிராம நிர்வாக அதிகாரியின் 23.08.2024 அன்றைய ‘DIGITAL CROP SURVEY’ பணியோடு சேர்ந்து தனது கள ஆய்வு பணியினை மேற்கொண்ட சமயம் அக்கிராமத்தின் சர்வே எண் 51ஃ4 பகுதியில் மிக மிக தொன்மையான ‘டோலகா ஹரப்பா’ நாகரீகத்தினை விட தொன்மையானதாக தென்படும் மணல் கற்களால் அடுக்குதல் கட்டுமான முறையில் வடிவமைக்கப்பட்ட கிணற்றினை கண்டறிந்துள்ளார் அதன் தொன்மை தெரியாமல் பாதுகாப்பற்று உரிமையாளர்களுக்கு தேவையான உப்பு நீர் காணப்படுவதாகவும், அதனை அந்த உப்பு உற்பத்தியாளர்கள் பயன்படுத்தி வருவதாகவும் மேலும் இத்தகைய மிகப்பெரிய கிணறானது எங்கனம் நில உடமை சீர்திருத்தத்திற்கு (1983ம் ஆண்டு) முன்பும்-பின்பும் உள்ள வருவாய் துறையின் இந்த கிராம வரைபடம் மற்றும் புல வரைபடம் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளது என்பது வியப்பாகவும்-வேதனையாகவும் உள்ளதாக தகவல் தெரிவித்தார்.
இது குறித்த தகவல்களை உடனடியாக புகைப்படங்கள் மற்றும் காட்சிப்பதிவுகளை கிராம நிர்வாக அதிகாரி வாயிலாக வருவாய்துறை உயர் அதிகாரிகளிடமும், தான் இந்த பகுதியில் கள ஆய்வுகளை மேற்கொண்டுவரும் இந்திய தொல்லியல் துறையின்-திருச்சி மண்டல அதிகாரிகளிடமும் பகிர்ந்து ஆவணப்படுத்தியுள்ளதாகவும் தகவல் தெரிவித்தார்.
மேலும் தனது கோரிக்கைகளாக இந்த கிணற்றினை உடனடியாக ஆய்வு செய்து வரைபடங்களில் பதிவு செய்து அரசுடமையாக்கி, பாதுகாக்கப்பட்ட தொன்மை சின்னமாக அறிவிக்கவேண்டும் என்றும்
இதேபோன்று சர்வே எண் 40ன் தென்கடைசி பகுதியில் உள்ள தனியார் விரால் வளர்ப்பு பண்ணையாக இருந்த பகுதியில் காணப்படும் ஏற்கனவே 29.07.2024 அன்று ஆவணப்படுத்தப்பட்ட சற்று சிறிய அளவிலான சமீபத்திய வெள்ளத்தால் மூடப்பட்டுள்ள சுமார் 40-50 அடி ஆழம் உள்ளதாக காணப்பட்ட வட்டக்கிணற்றினையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்
மேலும் அந்தப் பகுதியில் பல்வேறு இடங்களில் குடுவைகள் காணப்படுவதாகவும் அதனை அப்பகுதியை சேர்ந்தவர்கள் என்னவென்று தெரியாமலே சிதைத்து வருவதாகவும் அந்த குடுவைகளை ஆராய்ச்சிக்கு உட்படுத்தி பண்டைய மக்கள் சேமிப்பு குடுவைகளாக பயன்படுத்தினாரா? அல்லது முதுமக்கள் தாலியாக வயதானவர்களை வைத்து புதைக்கப்பட்டதா? என்பதையும் ஆராய்ச்சி செய்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்
மேலும் அதே பகுதியில் உள்ள மற்றும் ஒரு பண்டைய கால கல்வெட்டாக குதிரையில் மன்னன் வீற்றிருப்பது போலவும் அவனுக்கு பின்னால் குடை பிடித்து ஒருவர் நிற்பது போலவும் மது குடம் ஏந்திய இருவர் பின்னால் இருப்பது போலவும் பழங்காலத்து மணல்கல்வெட்டு சிற்பம் ஒன்று அப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டு கோவிலாக பாவித்து அப்பகுதி பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர் அதே இடத்தில் பாண்டிய மன்னர் ஒருவர் இரண்டு மனைவிகளை இரண்டு பக்கமும் வைத்து வண்ணம் ஒரு சிலையும் வைக்கப்பட்டுள்ளது இந்தச் சிலையையும் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் இவை கிபி 200-ம் நூற்றாண்டில் உள்ளதாக இருக்கலாம் எனவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் மேலும் சேதுபாதை ரோடு எனும் சாலை இந்த வழியாகத்தான் ராமேஸ்வரம் முதல் திருச்செந்தூர் வரை சென்றுள்ளது எனவும் அதற்கான சுவடுகள் மணல் கற்களால் அமைக்கப்பட்ட சாலைகள் ஆகியவை இன்றும் உள்ளது எனவும் எனவே இதனை எல்லாம் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து உண்மை என்ன என்பதை வெளி உலகத்திற்கு கொண்டு வர வேண்டும் எனவும் குஜராத் மாநிலத்தில் உள்ள டோலகா ஹரப்பா’ நாகரீகத்தினை விட தொன்மையானதாக தென்படும் மணல் கற்களால் ஆன கிணறு சிலைகள் சாலைகள் ஆகியவற்றை ஆய்வு செய்தால் இன்னும் பல பண்டைய நாகரிகம் பண்டைய மக்களின் வாழ்வியல் முறை ஆகியவை வெளி உலகத்திற்கு வரும் எனவும் கல்தோன்றி மண்தோன்றா காலத்து மூத்த கொடி எம் தமிழ் முன்குடி என்பதை இதன் மூலம் நிரூபிக்க முடியும் எனவும் இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக அலுவலர் ராஜேஷ் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-எஸ் நிகில் ஓட்டபிடாரம்.