கோவை: ஆக.29- சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;
“வருகிற 3-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் மாலை 6.05 மணிக்கு கொச்சுவேலியில் இருந்து புறப்படும் கொச்சுவேலி to பெங்களூரு சிறப்பு ரெயில் எண்: 06083 மறுநாள் காலை 10.55 மணிக்கு பெங்களூருவை சென்றடையும்.
மறுமார்க்கமாக, வருகிற 4-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை புதன்கிழமைகளில் பகல் 12.45 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் பெங்களூரு – கொச்சுவேலி விரைவு ரெயில் எண்: 06084 மறுநாள்காலை 6.45 மணிக்கு கொச்சுவேலி நிலையத்தைச் சென்றடையும். இந்த ரெயிலானது, கிருஷ்ணராஜபுரம், பங்காருப்பேட்டை, சேலம்,ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா,எர்ணாகுளம் டவுன், கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கன்னூர், மாவேலிக்கரை, காயன்குளம், கொல்லம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பால் போத்தனூர் சந்திப்பில் வியாபாரிகள் மற்றும் ஆட்டோ நடத்துனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், அதே நேரத்தில் ரயில்கள் வந்து செல்லும் நேரத்தை கணக்கிட்டு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என்று எதிர்பார்பதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சையத் காதர்
குறிச்சி