பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் தென் கைலாயம் என்று பக்தர்களால் போற்றப்படுகிறது. கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வெள்ளியங்கிரி மலை அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் மிகவும் புகழ் பெற்ற இந்த வெள்ளியங்கிரி மலை உள்ளது. 7வது மலையில் இருக்கும் சுயம்பு லிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் நடந்து செல்ல வேண்டும். குறிப்பிட்ட காலங்களில் இந்த மலையேற அனுமதி வழங்கப்படும்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த மலைப் பாதை சுமார் 5.5 கிலோ மீட்டர் தூரம் செல்லும், வெள்ளை விநாயகர் கோவில், பாம்பாட்டி சுனை, கைதட்டி சுனை, சீதை வனம், அர்ச்சுனன் வில், பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை போன்ற இடங்கள் இங்கு அமைந்துள்ளன. இதனை நடந்தே கடந்து சென்றால் 7 வது மலையில் அமைந்துள்ள சுயம்பு லிங்கத்தை பக்தர்கள் தரிசிக்க முடியும். வெள்ளியங்கிரி மலை மலைப் பாதை மிகவும் கரடு, முரடானது. வெள்ளியங்கிரி மலைப் பாதையில் ஏற பக்தர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் மே மாதம் வரை மட்டுமே அனுமதி வழங்கப்படும். இந்த நாட்களில் ஏராளமான மக்கள்
மலையேற்றத்தில் ஈடுபட்டு வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்வார்கள்.
சென்னை, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் இளைஞர்கள் பலர் மலை ஏறுவார்கள். இந்த ஆண்டு கடந்த மே மாதம் வரை பக்தர்கள் மலை ஏற அனுமதி அனுமதிக்கப்பட்டனர். அடிவார பகுதியில் அமைந்து உள்ள பூண்டி ஆண்டவர் சிவன் கோவிலில் பக்தர்கள் வழிபாடு நடத்தி செல்வது வழக்கம். இதனால் அந்தக் கோவில் வளாகத்தை சுற்றி பூஜை கடைகள், பொம்மை கடைகள் வியாபாரம் நடந்து வருகிறது. தேங்காய், பழம் உட்பட பூஜை பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அடிவாரத்தில் உள்ள பூண்டி ஆண்டவர் சிவன் கோவிலுக்கு வந்த ஒற்றைக் காட்டு யானை, அங்கு இருந்த பூஜை கடைக்குள் புகுந்தது. இதனால் வியாபாரிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.