கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பல சிற்றாறுகள் ஒன்று சேர்ந்து நொய்யல் நதியாக உருப்பெற்றுள்ளது. இந்த ஆறு கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய 4 மாவட்டங்களில் பாய்கிறது. இந்த நொய்யல் ஆறு 165 கிலோ மீட்டர் நெடும் பயணம் செய்கிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஒரு காலத்தில் இந்த நொய்யல் ஆற்றை நம்பி, விவசாய பணிகள் செய்யப்பட்டு வந்தன. ஆனால் நகரமயமாக்கல், நவீன மயமாக்கல் ஆகியவற்றால் நொய்யல் ஆறு தன் பொலிவை இழந்து கழிவுநீர் செல்லும் ஓடையாக மாறி உள்ளது. இந்த நொய்யல் ஆற்றில் தொழிற்சாலை கழிவுகள், சாயப்பட்டறை கழிவுகள், மருத்துவமனை கழிவுகள், அனைத்து குடியிருப்புகளின் கழிவு நீர் கலக்கின்றது. இதனால் நொய்யல் ஆறு மாசடைந்து பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் சென்னை என்.ஐ.டி பேராசிரியர்கள் மூலம் நொய்யல் ஆற்றின் நீர் தன்மை குறித்து ஆய்வு நடத்தினர். என்.ஐ.டி ஆய்வின் முடிவில் நொய்யல் ஆற்றின் நீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாது எனவும், கால்நடைகளோ மனிதர்களோ பயன்படுத்த முடியாத வகையில் மாசடைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாகவும், அதற்கு நிலத்தடி நீர்மட்டம் மாசடைந்துள்ளது தான் காரணம் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கோவை, திருப்பூர், ஈரோடு கரூர் மாவட்டங்களில் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், சிறுநீரக பாதிப்பு, குடல் தொடர்பான நோய்கள் பலருக்கும் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது என நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில் நொய்யலை பாதுகாக்க கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் இந்த சங்கத்தினர் மனு கொடுத்தனர். குளங்களில் தேங்கி நிற்கும் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே விவசாயிகள், பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.