ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செக்காரக்குடி ஊராட்சியின் தெற்கு பகுதியில் இரண்டு ஓடைகளும் கிழக்கு பகுதியில் ஒரு ஓடையும் உள்ளது. இதில் தெற்கு பகுதியில் உள்ள இரண்டு ஓடைகளிலும் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி ஆனது கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் செக்காரக்குடி ஊராட்சியின் கிழக்கு பகுதியில் மகிளம்புரம் அருகே சிறிய தரைமட்ட பாலம் அமைந்துள்ளது இந்த மூன்று பாலங்கள் அமைந்துள்ள சாலைகளின் வழியாக மட்டுமே செக்காரக்குடிக்கு செல்ல முடியும். இந்நிலையில் இன்று மதியம் முதல் மாலை
வரை பெய்த கனமழை காரணமாக செக்காரக்குடி தெற்கு பகுதியில் உள்ள பாலம் அமைக்கும் பணி நடக்கும் இடத்தில் அதிக அளவில் வெள்ள நீர் வந்ததால் இணைப்பு சாலை அரித்துச் செல்லப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் செக்காரக்குடி ஊராட்சியின் கிழக்குப் பகுதியில் உள்ள மகிழம்பூரம் தரைமட்ட பாலத்திலும் மிக அதிக அளவில் வெள்ள நீர் சென்றதால் செக்காரக்குடியில் இருந்து மற்ற பகுதிகளுக்கு செல்ல முடியாமல் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் மகிழம் புரம் தளவாய்புரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த செக்காரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயின்று வரும் மாணவ மாணவிகள் தங்களது வீடுகளுக்கு செல்ல முடியாமல் தவித்தனர் மேலும் பொதுமக்களும் செக்காரக்குடியில் இருந்து வெளியே செல்லவோ வெளியில் இருந்து சக்கரவாடிக்கு வரவா முடியாமல் தவித்து வந்தனர்.
இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா செக்காரக்குடிக்கு சுற்றுப்பாதையான சிங்கத்தாகுறிச்சி வழியாக சென்று அங்குள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 60 மாணவ மாணவிகளிடம் கேட்டறிந்து எம்எல்ஏ சண்முகையா தனது சொந்த செலவில் இரண்டு வேன்களை ஏற்பாடு செய்து அவர்களது கிராமங்களுக்கு அனுப்பி வைத்தார் நிகழ்வில் ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-எஸ்.நிகில், ஓட்டபிடாரம்.