கோவை மாவட்டம் வால்பாறை சிங்கவால் குரங்குகள் டவுன் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் குடியிருப்புகளுக்கு பயன்படுத்தப்படும் மின் கம்பத்திலிருந்து கடைகளுக்கும், குடியிருப்புக்கு வரும் மின் ஒயர்களில் தொங்குகிறது எதிர்பாராத விதமாக மின் ஒயர்கள் அறுந்து கீழே விழுந்தால் வன விலங்குகளுக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்ப ஏற்படுகிறது.
வனவிலங்கு பாதுகாக்க வனத்துறை தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் வால்பாறையில் சிங்கவால் குரங்கால் வால்பாறை டவுன் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று வீட்டில் உள்ள டிவி,பிரிட்ஜ், போன்ற விலை உயர்ந்த பொருட்களை சேதம் செய்கிறது அதேபோல் கடைகளிலும் பொருட்களை வீணடிக்கிறது இதனால் வணிகர்களும் இப்பகுதியில் இருக்கும் பொது மக்களும் மிகவும் சிரமப்படுகின்றன.
இந்நிலையில் தமிழக அரசு வனவிலங்கு பாதுகாக்க பல கோடி ரூபாய் செலவு செய்து வருகிறது ஆனால் வனவிலங்குகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறதா என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது வால்பாறை பகுதியில் உள்ள வன விலங்குகளையும் குறிப்பாக சிங்கவால் குரங்குகளையும் பாதுகாக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
இச்செய்தி அறிந்து நாமும் நேரடியாக ஆய்வு செய்தோம் உண்மையிலே சிங்கவால் குரங்கு வால்பாறை டவுன் மட்டும் குடியிருப்பு பகுதிக்கு சென்று பல பொருட்களை வீணாகிறது பொதுமக்கள் யாரிடம் சொன்னாலும் நிரந்தர தீர்வு என்று ஏற்படவில்லை என்று வேதனைப்படுகின்றனர்
இந்நிலையில் வனத்துறை அதிகாரிகள் சிங்கவால் குரங்குகள் இருக்கும் டவுன் பகுதிகளில் இருந்து வனப்பகுதிக்கு அனுப்பி வைத்து அதற்கு தேவையான பழம் உள்ளிட்ட உணவுப் பொருட்களும் குடிநீர் வசதியும் செய்து கொடுக்கலாம் வனப்பகுதியில் கனிகள் தரும் தரும் மரங்களை நடவு செய்து அதற்கு தேவையான உணவுகளை வழங்கினால் உணவுக்காக கடைக்கு ,குடியிருப்புக்கு வராது ஏன் வனத்துறை அதிகாரிகள் செய்து தர வேண்டும் என்றும் நாமும் நாளைய வரலாறு மூலம் பொதுநலத்துடன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கோரிக்கை வைக்கிறோம்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
-P.பரமசிவம்.வால்பாறை,